மீனம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

116

மீனம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அக்டோபர் மாதத்திற்கான 12 ராசிகளுக்கான ராசி பலன்….

மீனம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021….

மீனம் ராசிக்காரர்களுக்கு 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரொம்ப விசேஷமான ஒரு மாதம். 1ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் மிக அற்புதமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் தெளிவாக இருக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும். சிக்கல்கள் தீரும். மன பயம் நீங்கும். வியாதிகள் தீரும்.

மேலும் படிக்க: மீனம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் – வீடியோ!

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வெகு சிறப்பாக இருக்கும். தேவையற்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இறைவன் ஒரு நல்ல முடிவைத் தருவார். 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் ஒரு திருப்பு முனையான மாதமாக இருக்கும். பலருக்கும் பல விதமான நன்மைகளை செய்ய வேண்டும் என்று தோன்றும். தாத்தா, பாட்டி உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.