முதுகு தண்டுவடப் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு!

81

முதுகு தண்டுவடப் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு!

செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்றைய (21-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 21 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இந்த நாள் இனிய நாள். அன்னை மீனாட்சியை வழிபட வேண்டும். வியாபார தொடர்புகள் விரிவடையும். தன லாபம் உண்டு. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துச் சென்றால் நன்மை உண்டாகும்.

கும்பம்: அனுகூலமான நாள். தன லாபம் நிறைந்த ஒரு நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பக் கூடாது. முதலீடும் செய்யக் கூடாது. முதுகு தண்டுவடப் பகுதிகளில் பிரச்சனை வரலாம்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். சக நண்பர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் பெருகும். வியாபாரம் வசப்படும். தன லாபம் உண்டு.

தனுசு: எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே முடியும் நல்லதொரு நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்: பிறரது குற்றம் பார்ப்பது போன்று உங்களது குற்றத்தையும் காண வேண்டும். புதிய பதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும். தெய்வ அனுகூலங்கள் நிறைந்த ஒரு நாள். திருமண விஷயங்களில் பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இடது கை, வலது கை மற்றும் தோள்பட்டைகளில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்: வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு மாற்று சிந்தனை வெற்றி பெறும். போளி தயாரிப்பவர்களுக்கு பிரச்சனை வரலாம். தன லாபம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். தொட்டது துலங்கும் நாள். எதிர்மறை விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், குடும்பம் அருமையாக இருக்கும். கழுத்துப் பகுதியில் பிரச்சனை வரலாம்.

சிம்மம்: எந்த காரியத்திலும் பதற்றம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை புதிய காரியஙகளை தவிர்க்க வேண்டும். பயணங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திருட்டு போவதற்கு வாய்ப்பு உண்டு. உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வளர்ப்பு பிராணிகளின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடகம்: அனுகூலமான தகவல்கள் தேடி வரக்கூடிய நாள். வியாபாரம் அருமையாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். புதிய வேலை வாய்ப்பு அமையும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். கண் நரம்பு அல்லது கால் நரம்புகளில் சில பிரச்சனைகள் வரலாம்.

ரிஷபம்: நல்ல வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனிலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அதிர்ஷ்டம் பல வகைகளில் உங்களை தேடி வரும். மனதில் விரும்பியவரை மனமுடிக்கும் காலகட்டம்.

மேஷம்: மிகச்சிறந்த நாள். மாற்றங்கள் உண்டாகும் நாள். வாய்வு தொந்தரவு வரலாம். உடல் நலனில் அக்கறை வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

youtube.com/watch?v=KKcK5sCQoNU