மூதாதையர்களை வழிபட வேண்டும்; மனதத்துவ மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்!

61

மூதாதையர்களை வழிபட வேண்டும்; மனதத்துவ மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்!

ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (12-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: முதலீட்டு எண்ணங்கள் பெருகும். கல்விக்கு வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். மூதியோர் இல்லத்தில் பலரும் சேர்வார்கள். பிள்ளைகள் மூலம் செலவு கூடும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்ப கஷ்டம் விலகும். நகை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் நேர்மறை எண்ணங்கள் கூடும். புதிய வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம்: மிகச்சிறந்த நாள். வேலைமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் நெருக்கடி இருக்கும். வியாபார பரிவர்த்தனை வெற்றி தரும். மனதத்துவ மருத்துவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய நாள்.

கடகம்: வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்து பெரியவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வியாபார தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும்.

சிம்மம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நெருக்கடி இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் தங்களது உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி: குழந்தை பாக்கியத்திற்கு தத்து குழந்தையை தேர்வு செய்யலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் விரிவடையும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: யாரிடமும் கோவம் கூடாது. வண்டி, வாகனங்களில் கூடுதல் கவனம் தேவை. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: மன சஞ்சலங்களை தவிர்ப்பது நல்லது. மகா பெரியவாவை வழிபட வேண்டும். கந்தர் சஷ்டி கவசம் படிக்க வேண்டும். வீட்டை அடமானம் வைத்து பலரும் கடன் வாங்குவீர்கள். அடமானம் வைத்த பொருளை இழக்கும் சூழல் கூட வரலாம். நண்பர்களால் நன்மை உண்டு.

தனுசு: புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று ஆசை வரும். மூதாதையர்களை வழிபட வேண்டும். தன லாபம் பெருகும். குடும்பத்தில் வாக்கு, வாதங்களை தவிர்த்தால் நல்ல நாள்.

மகரம்: வீட்டை பராமரித்தல், வீட்டை அழகுபடுத்துதல் என்று இருப்பீர்கள். மிகப்பெரிய வெற்றிகள் குவியும். வேலை கிடைக்கும். கண் பிரச்சனை வரலாம். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்: தன லாபம் கிடைக்க கூடிய நாள். மன மகிழ்ச்சியான நாள். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். வேலை மாற்றம் ஏற்படும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. சளி பிரச்சனை வரலாம். உறவினர்களின் இழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம்: நல்ல நாள். சந்தோஷமான நாள். நிறைய வருமானம் வரும். புதிய வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். தந்தை வழி உறவுகள் உதவி செய்வார்கள்.