மேஷம் ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்!

139

மேஷம் ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்!

லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும். ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.

அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். அதன் படி, முதலில் மேஷ ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மேஷ ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

  1. எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கக் கூடாது. ஒரு சிறிய தொகையாவது கொடுத்து வாங்க வேண்டும்.
  2. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
  3. சிவப்பு நிறத்திலான கைக்குட்டை பயன்படுத்துவது சிறந்தது. அதோடு, அதிர்ஷ்டமும் உண்டாகும்.
  4. டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பு ஒன்றை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள நன்மைகள் பெருகும்.
  5. பெண்கள் வெள்ளியில் செய்யப்பட்ட வளையல் அல்லது கங்கணம் அணிந்து கொள்ளலாம்.
  6. ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக இருந்தால், ஸ்வீட் அல்லது மிட்டாய் கடைகளில் வேலை பார்க்கக் கூடாது. அப்படியே வேலை செய்தால் உங்களது அதிர்ஷ்டத்தை அது கெடுக்கும்.
  7. எப்போதும் பெரியோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். மாதா, பிதா, குரு, ஞானிகள், ஆன்மீக பெரியோர்கள் என்று அனைவருக்கும் உதவியும், சேவையும் செய்ய வேண்டும்.
  8. இரவில் தூங்கும் பொழுது உங்களுக்கு அருகில் தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை காலையில் எழுந்ததும், ஏதாவது ஒரு செடியில் ஊற்றி விட வேண்டும்.