மேஷம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

61

மேஷம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தமிழ் மாத ராசி பலன் 2021

சைதை ராஜாவின் மேஷம் ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2021

ஐப்பசி மாத ராசி பலன் மேஷம் 2021….

சிறப்பான ஒரு மாதம். கௌரம், செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய ஒரு காலகட்டம். குடும்பத்தில் பொருளாதார மேன்மை உண்டாகும். தன வரவு உண்டு. குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் கூட ஆதரவாக செயல்படுவார்கள். உங்களது சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் ஒரு காலகட்டம். ஆரம்ப கல்வி பயிலும் மாணவ மாணவிகள் நன்றாக படிப்பார்கள்.

பிபிஓ, ஹார்டுவேர், சாப்ட்வேர், கொரியர் சர்வீஸ், தபால் தந்தி, விளையாட்டு வீரர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரிவில் பணியாற்றக் கூடியவர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எடிட்டர்கள், கேமராமேன்கள், பைனான்சியர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என்று எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் ஒரு சந்தோஷமான காலகட்டம்.

இந்த ஐப்பசி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வருவாய் திருப்தி கரமாக இருக்கும். தாய், தாய் வழி சொந்தங்களின் ஆதரவு கிடைக்கும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்கும் சூழல் இருக்கிறது. படிக்கும் மாணவ, மாணவிகள் மிக அற்புதமாக படிப்பார்கள். குல தெய்வ வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக வரக்கூடிய ஒரு நிலை வரும்.

சொந்த தொழில் புரியும் அன்பர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான பணியார்கள் கிடைப்பார்கள். பத்திரிக்கை, மீடியாத்துறை, ஆசிரியர்கள், ஆடிட்டர்கள், வங்கி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், இலக்கியவாதிகள், சொற்பொழிவார்கள், பேராசிரியர்கள் என்று அனைவருக்கும் உற்சாகமான ஒரு மாதமாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு சென்று வரும் சூழல் உருவாகும்.

நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். புதிய நட்புகள் உருவாகும். வயதானவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பல வகைகளிலிருந்து பணம் வந்து சேரும் நாள். லட்சுமி கடாட்சம் பெருகும். கலை, கலைத்துறை, சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு உற்சாகம் நிறைந்த ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வரலாம்.

காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, இராணுவத்துறை, பொறியியல் துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெறக்கூடிய ஒரு அமைப்பு. தேவையான இடத்திற்கு பணி மாறுதலும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சொந்தத் தொழில் செய்பவர்கள் திருப்திகரமாக புதிய தொழில் கூட ஆரம்பிக்கலாம். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தனியார் துறை, அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் கூட நன்றாக பணியாற்றி உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

இந்த மாதம் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகள் சந்திராஷ்டமம் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை வேண்டாம். முருகனை வழிபட வாழ்வில் சுபீட்சம் உண்டாகும். சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும்.