மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் – ஆகஸ்ட் மாத ராசி பலன்!

101

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் – ஆகஸ்ட் மாத ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021…இன்றைய பதிவில் முதலில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய 5 ராசிகளுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்…

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு விடிவு தெரியக்கூடிய அற்புதமான காலகட்டம். வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கக் கூடிய சுழல் இப்போது உங்களுக்கு கணிந்து வரும். மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் தற்போது பஞ்சமஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மாதம் முழுவதிலும் அவர் பஞ்சம ஸ்தானத்தில் அமரப் போகிறார். ராசி அதிபதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பல நன்மைகளை செய்யும்.

இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியிலேயே சந்திர பகவான் அமர்ந்து மாதம் துவங்குகிறது. தன ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். சதுர்த்தம கேந்திரிய ஸ்தானத்தில் சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் சேர்த்திருக்கின்றனர். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன். விருச்சிகத்திலே கேது பகவான், மகரத்திலே வக்ர சனி, கும்பத்திலே வக்ர குரு என்று இந்த மாதம் கிரக நிலைகள் அமைகிறது.

மேஷ ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

கடகத்தில் இருக்கக்கூடிய சூரிய பகவான் 6ஆம் தேதி சிம்மத்தில் பிரவேசம் செய்கிறார். பிறகு கன்னி ராசிக்கு சென்று உச்சம் அடையும் போது வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கித் தரும். உதாரணமாக, சூரிய பகவான் சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்யப் போகிறார். சிம்மத்திலே இருக்கக் கூடிய சுக்ர பகவான் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்வார். தன ஸ்தானதிபதியாக சுக்கிர பகவான் இந்த மாதத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அவர் அமர்ந்திருப்பது குடும்பத்தில் சுபச் செய்திகள் நடப்பதற்கான சூழலை உருவாக்கித் தரும்.

மகன் அல்லது மகளின் வாழ்க்கை தொடர்பான சுபச் செய்திகளுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைந்திருக்கிறது. தன தேவைகள் பூர்த்தியாகும். வீட்டு பெண் குழந்தைகள் பூபெய்யக்கூடிய நல்ல சூழல். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் தற்போது விலகும் நேரம் வந்து விட்டது. அலுவலகங்களில் உயர் பதவி தேடி வரும்.

வியாபாரிகளுக்கு அடுத்தகட்ட உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு கடன் உதவிகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு மிகச் சிறப்பான வேலை வாய்ப்பு அமையும். குடும்ப பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். சில சில சலசலப்புகள் வந்து செல்லும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம். குழந்தை வரம் கிடைக்கும்.

வழிபாடு: கொப்புடைய அம்மனை வழிபாடு செய்து கொப்புடைய அம்மனே போற்றி என்று தினமும் 18 முறை சொல்லி வர நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம்:

இந்த மாதம் ஒரு அற்புதமான மாதம். வாழ்க்கையில் முன்னேற்றங்களை அள்ளித்தரும் மாதமாக இந்த மாதம் அமையப் போகிறது. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது ராகு பகவான் உங்க ராசியிலேயே இருக்கிறார்.

உங்களது திரிதியை ஸ்தானத்தில் சூரிய பகவானும், புதன் பகவானும் இருக்கிறார்கள். இதில், சூரிய பகவான் இந்த மாதம் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். புதன் பகவான் 6 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். அதன் பிறகு 24ஆம் தேதி கன்னி ராசியில் உச்சம் அடைந்துவிடுவார். சுக்கிர பகவான் இந்த மாதம் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் சென்றுவிடுவார். இப்பொழுது செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் சிம்மத்திலேயே இருப்பார்.

ரிஷப ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

உங்களுடைய சப்த ஸ்தானத்தில் கேது பகவானும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும், 10 ஆம் இடத்திலே குரு பகவானும் அமர்ந்திருக்கிறார்கள். ராசி அதிபதியாக சுக்கிர பகவான் சதுர்த்தம கேந்திரம் ஸ்தானத்தில் இருக்கிறார். பண வரவு அதிகரிக்கவும், சொத்து சுகம் பெருகுவதற்கும் ஏற்ற காலகட்டம். ஆடம்பர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

சொத்து சுகம் வாங்கும் போது அளவு அறிந்து வாங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாங்கி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் போது கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வண்டி, வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாய்மைப் பெண்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்கு குல தெய்வ வழிபாடு சிறந்தது. வியாபாரம் பெருக குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். புதிய தொழில் அமைவதற்கான யோகம் இருக்கிறது. 24 ஆம் தேதிக்குப் பிறகு மிகப்பெரிய யோகம் தேடி வரும். உடல் நலக் கோளாறு நிவர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஞாபகத்திறன் அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரையின் பேரில் குடும்பம் முன்னேறும்.

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த மாதம் குரு பகவானின் அனுகிரகத்தால் நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். தினமும் குரு பகவானை வழிபட வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபடக்கூடிய நல்லதொரு மாதமாக அமையும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அதிகம் பகைத்துக் கொள்ளக் கூடாது. இந்த சூழலையெல்லாம் புரிந்து கொண்டு நடந்தால் போதும் இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதுனம்:

மிகப்பெரிய ஏற்றங்கள் உருவாகக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையப் போகிறது. ராசிநாதனின் வல்லமை கடைசி வாரத்தில் மிகப்பெரிதாக பெருகப்போகிறது. இந்த மாதத்தின் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது உங்களது தன ஸ்தானத்தில் ராசி நாதனுடன் சூரிய பகவான் மாதத்தில் தொடக்கத்தில் இருக்கிறார். திரவிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார்கள்.

அஷ்டத்தில் சனி பகவான், பாக்யத்தில் குரு பகவான், லாபத்தில் சந்திர பகவான், விரையத்தில் ராகு பகவான் என்று மாதம் துவங்குகிறது. இந்த மாதம் 17 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 6 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசிக்குள், 24 ஆம் தேதி கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். சுக்கிர பகவான் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் செல்கிறார்.

கிரக நிலைகளின் கணிப்பின் படி, இந்த மாதம் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. பணப்புழக்கம் இருக்கும். எழுத்தாளர்களின் வல்லமை பெருகும். எழுதும் எழுத்தில் எதிர்மறை என்று எதுவும் இருக்கக் கூடாது. எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று அனைவரது வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

மாணவர்களுக்கு குழப்பம் இருந்து தெளிவாகும், 24 ஆம் தேதிக்குப் பிறகு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு 17 ஆம் தேதிக்குப் பிறகு மிகப்பெரிய ஏற்றம் வரும். அதுவரையில் சின்ன சின்ன குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் அமையும். மருத்துவ கல்வியில் மாணவர்களுக்கு மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும். வேலை பறி போனவர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை அமையும். இசை துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் காத்துக் கொண்டிருக்கிறது.

கடகம்:

கடக ராசி நேயர்களே சூரிய பகவானும், புதன் பகவானும் இந்த மாதத்திலேயே சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். உங்களது நல் எண்ணத்தை வெற்றியடைச் செய்கிற ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் அமையும். ராசிக்கு அதிபதியாக இருக்கக் கூடிய சந்திர பகவான் 10 ஆம் இடத்திலேயே அமர்ந்து இந்த மாதம் தொடங்குகிறது.

ராசிநாதன் சந்திரபகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்பு அமையும். வாழ்க்கையில் வளர்ச்சி விறுவிறுப்பாக அமையும் ஒரு காலகட்டம். தேங்கிக் கிடந்த சூழல் மாறி வளர்ச்சி விறுவிறுப்பாக இருக்கும். உங்களது சிந்தனையில் வேகவேகமான ஒரு வளர்ச்சி இருக்கும். உறுதியான வருமானத்திற்கு சூரிய பகவான் வழிகாட்டப் போகிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை இந்த மாதம் கடக ராசிக்காரர்கள் புரிந்து கொள்வார்கள்.

தந்தை வழியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல், உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் வார்த்தை உங்களை பக்குவப்படுத்துவதாக அமையும். ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரகள். அதன் மூலம் நல்ல வருமானம் வரும். கல்வியில் சிறந்த உண்டாகும்.

கடக ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த மாத இறுதியில் நல்ல லாபம் வரும். கடக ராசியில் பிறந்த அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த மாதக் கடைசியில் நல்ல லாபம் வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து, அதன் மூலம் நல்ல வருமானம் அமையும். இளைஞர்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடு கட்டுவதற்காக கடன் வாங்கும் சூழல் வரும். மனைவி வழியில் சொத்துக்கள் வந்து சேரும். குழந்தை பேறுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த மாதம் செவ்வாய் கிழமை தோறும் விநாயகப் பெருமானை அருகம்புல் கொண்டு வழிபட்டு வர குழந்தை பாக்கியத்தை உருவாக்கித் தரும். வண்டி, வாகங்களை பராமரித்து அதன் பிறகு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனம் தொடர்பான செலவுகள் இந்த மாதம் இருக்கும். மூத்தவர்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளின் உடல் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

அக்கம், பக்கத்தில் பாதுகாப்பாக பழக வேண்டும். நோய்த் தொற்று உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் வழிபட வேண்டிய தெய்வம் தையல் நாயகி. ஓம் தையல் நாயகியே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் உங்களது வாழ்க்கையில் எல்லா வகையிலும் இருந்து முன்னேற்றங்கள், வெற்றிகள் வரும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரும் மாதமாக, ஒரு வரம் தரும் மாதமாக அமையப் போகிறது. மிகச்சிறந்த முன்னேற்றம், மிகச் சிறந்த வளர்ச்சியும் தரக்கூடிய ஒரு மாதம். தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் பகவானும், சுக்ர பகவானும் இருக்கிறார்கள். செவ்வாய் பகவான் உங்களின் பாக்யாதிபதி. அவர் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், மிகப்பெரிய முன்னேற்றங்களை உருவாக்கித் தருவார்.

முதலில் சில சிரமங்களை கொடுத்து அதன் பிறகு தான் முன்னேற்றங்களை தருவார். ஆகையால், தினமும் நாம் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலேயே உயர் பதவி தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொழுதும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் போதும், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மாதம் முழுவதும் பெண்கள் குங்குமத்தை வைத்திருக்க வேண்டும். குங்குமம் தான் பெண்களுக்கு உணர்வுப் பூர்வமான ஒரு பாதுகாப்பு. சிம்ம ராசிக்கார்ர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மன உறுதி, காரியங்களில் வல்லமை பெண்களுக்கு குடும்பத்தில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்ம ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். மனதில் கவலையும், பயமும் இருக்கும். பெரியோர்களுக்கு மனதில் ஒரு தளர்ச்சி இருக்கும். நமக்கு யாருடைய ஆதரவும் இல்லையோ என்று சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது தோன்றிக் கொண்டிருக்கும். ஆனால், எதற்கும் கவலைப் பட தேவையில்லை. ஏனென்றால், இறைவனின் அனுக்கிரகம் உங்கள் மீது விழுகிறது.

சிம்ம ராசி அரசியல்வாதிகளின் பெருமையை இந்த உலகம் பேசும்படியாக இந்த மாதம் அமையப் போகிறது. சர்வ காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தன லாபம், பொருளாதார லாபம், கல்வி மேன்மை என்று அமையும். வியாபாரத்தில் மிகச் சிறந்த லாபம் வரும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். சிம்ம ராசி மருத்துவர்கள் சிறந்த புகழைப் பெறுவார்கள். கைராசியான மருத்துவர் என்ற பெயரைப் பெறுவார்கள். வேலையிழந்த ஓட்டுநர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பேரும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள். இந்த மாதம் தாணு மாலயனை வழங்கி வழிபட வேண்டும். ஓம் தாணு மாலயனே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.