மேஷ ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

104

மேஷ ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கணித்த 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலனை கணித்துள்ளார். இந்தப் பதிவில் நாம் மேஷம் ராசிக்கான தமிழ் மாதமான கார்த்திகை மாத ராசி பலனை பார்ப்போம்….

மேஷம்:

பொதுவாக இந்த மேஷ ராசிக்காரர்கள் எதிலேயும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உங்களது வாழ்க்கையில் இதுவரையில் இருந்த தடைகள், பிரச்சனைகள் அனைத்தும் குறையும். எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு இந்த காலத்தில் உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

பொருளாதார நிலையில் சிறு சிறு ஏற்றத் தாழ்வுகள் வந்து நீங்கும். உடன் பிறப்புகளால் சிறு சிறு மனக்கசப்புகள் உருவாகும். எடுக்கும் முயற்சியில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சாதகமாக அமையும்.

மேஷ ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. பூரவீக சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் வந்து நீங்கும். பங்கு வர்த்தகத்தில் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குல தெய்வ வழிபாடு உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையளிக்கும். மாத முற்பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால், பிறபகுதில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

நல்ல நல்ல வாய்ப்பு வீடு தேடி வரும்: மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலமாக ஆதாயமான பலன்கள் ஏற்படும். தன வரவு உண்டு. தந்தையின் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தை உங்களது உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். உத்தியோகத்தில் இதுவரையில் தடைபட்ட உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு எல்லாம் இனி உங்களுக்கு வந்து சேரும். உங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 3, 4 மற்றும் 5.

பரிகாரம்: சென்னை வடபழநி முருகப் பெருமானை செவ்வாய் கிழமை நாட்களில் வழிபட வேண்டும்.