மேஷ ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

127

மேஷ ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள் 2021…

மேஷ ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்…

யோக பாக்கியம் கிடைக்கும் மாதம். பொருளாதார மேன்மை, கணவன் – மனைவி உறவில் மேன்மை, உத்தியோக மேன்மை கிடைக்கப் பெறும் ஒரு அற்புதமான மாதம். கௌரவம், புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு சேரும் ஒரு அமைப்பு. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி மீண்டும் ஒன்று சேரும் ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும்.

மேலும் படிக்க: மேஷ ராசி புரட்டாசி மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

தன வரவு உண்டு. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். பி பி ஓ, ஐடி நிறுவனம், தபால் துறை, கொரியர் சர்வீஸ், விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் என்று அனைவருக்கும் நல்ல வேலை வாய்ப்பு அமைந்து, வருமானம் அதிகரித்து சந்தோஷமாக இருப்பார்கள்.

பத்திரிக்கைத் துறை, மீடியாத் துறை, எழுத்துத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு யோக பாக்கியங்கள் நடக்க கூடிய ஒரு அமைப்பு இருக்கிறது. பகைவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தாய் வழி உறவினர்கள் வீடு தேடி வந்து உங்களிடம் பேசும் ஒரு சூழல் உண்டு. வீடு இல்லாதவர்கள் வீடு, இடம், நிலம், பிளாட் என்று வாங்கலாம். வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டு.

படிக்கும் மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பார்கள். தந்தை, தந்தை வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். அரசியவாதிகளுக்கு ஆதாயம் கிடைக்க கூடிய ஒரு காலகட்டம். ரிஷிகள், முனிவர்கள், குரு மார்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குல தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் உண்டு. எதிரிகள் ஓடி ஒழிவார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும்.

கடன் இல்லாமல் இருந்தால், சிறிதளவு கடன் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சொந்த தொழில் செய்யும் அன்பர்களுக்கு நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்கள் அமைவார்கள். பத்திரிக்கைத் துறை, எழுத்துத் துறை, வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், வங்கி பணியார்கள் என்று அனைவருக்கும் ஒரு உன்னதமான காலகட்டமாக இந்த மாதம் இருக்கும்.

வாழ்க்கைத் துணை ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும், பிறந்த வீட்டிலிருந்து பணம் கொண்டு வரும் ஒரு அமைப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். பெண்களால் ஆதாயம் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மாதம். இரும்பு சம்பந்தமான தொழில் செய்யும் அன்பர்களுக்கு ஒரு உன்னதமான மாதம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்களுக்கும் புதிதாக வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான ஒரு சூழல் அமையும்.

சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுதல் கிடைக்கும். ஒரு சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். தொழில் மேன்மை, உத்தியோக மேன்மை கண்டிப்பாக இருக்கு. தொழிலை மாற்றியமைக்கலாம் அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். ஓரளவு லாபம் வரக்கூடிய ஒரு நல்ல காலகட்டம். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு 2ஆவது திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக சென்று வர வேண்டும்.          தமிழ் தேதியின் படி வரும் 23, 24, 25 ஆகிய நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால், இந்த நாட்களில் மேஷ ராசி அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.