மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பலன் 2023: வம்பு, வழக்கு பிரச்சனை தீரும்; பொற்காலமான காலகட்டம்!

64

மேஷ ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் 2023: வம்பு, வழக்கு பிரச்சனை தீரும்; பொற்காலமான காலகட்டம்!

கடந்த காலங்களில் நிறைய கஷ்டங்களை மேஷ ராசிக்காரர்கள் அனுபவித்துவிட்டார்கள். வேலை பார்க்கும் இடங்களில் இதமான சூழல் இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி ஒரு நிழலாக வரப் போகிறது.

லாபமான காலம் ஆரம்பிக்கிறது. சந்தோஷமான நேரம். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு நிவாரணம் கிடைக்கப் போகிறது. முக்கியமாக வேலையில் இருந்த பிரச்சனை தீரும். சரியான வேலையை சனி பகவான் அமைத்து கொடுப்பார். மீண்டும் அரியனை ஏற, சிம்மாசனத்தில் அமர ஏற்ற காலம் இது.

Also Read This For Dhanusu Rasi: 2023 சனி பெயர்ச்சி பலன்: ஆட்டம் போட போகும் தனுசு ராசி!

நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர்ந்த பதவியிலிருந்து கீழே விழுந்தவர்களுக்கு மீண்டும் உயர்ந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும். சில நேரங்களில் எதிர்பாராத பதவி உயர்வு கூட தேடி வரும்.

நெருங்கிய உறவுகளை இழந்திருப்பீர்கள். பெண்களாக இருந்தால் கணவனை பிரிந்திருப்பீர்கள். அப்படியில்லை என்றால் இழந்திருப்பீர்கள். இதுவே ஆணகளாக இருந்தால் மனைவியை பிரிந்திருப்பீர்கள் இல்லையென்றால் இழந்திருப்பீர்கள். இனி வரக் கூடிய காலகட்டங்களில் மன நிம்மதி ஏற்படப் போகிறது. இனிமேல் இது போன்ற இழப்பு ஏற்படாமல் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்க யோகம் கூடி வரும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய வாழ்க்கை எப்போது கிடைக்கும் என்று கஷ்டப்பட்டவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்கும் யோகத்தை கொடுத்து, அதில் வெற்றியையும் தேடிக் கொடுப்பார்.

வம்பு, வழக்கு பிரச்சனையின் தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் நியாயமானவர் என்று நிரூபிக்கப் போகிறீர்கள். தன வருமானம் கிடைக்கும். கம்யூனிகேஷன் செக்டரில் நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தோஷம் இருந்தால் நிவர்த்தியாகும்.

Click Here For Full Video: Mesha Rasi Sani Peyarchi Palan: மேஷ ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள்- வீடியோ தொகுப்பு!

உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு உண்டாகும். பெண்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். அப்பாவுக்கு, மகளுக்கும் பாசம் அதிகரிக்கும். நோயிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். முதலீடு அதிகரிக்கும். அருமையான காலகட்டம். செய்தொழில் முன்னேற்றம் உண்டு. வெற்றிகள் வந்து குவியும். மனக்கவலை மறையும். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆன்மீகவாதிகள் மேன்மையடைவார்கள். காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான நாள். வழக்கறிஞர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

சுய ஒழுக்கத்தில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டும். நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொற்காலமான ஒரு காலமாக இந்த காலத்தை கருதலாம்.