யாரிடமும் வம்பு செய்யக் கூடாது; கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்!

63

யாரிடமும் வம்பு செய்யக் கூடாது; கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்!

செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (16-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள். தொட்டது துலங்கும். அரசு பதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கூடி வரும். பெண் தொழில் முனைவோர்கள் மிகச்சிறந்த ஏற்றத்தை பெற முடியும். மிகப்பெரிய வெற்றிகள் உண்டு.

ரிஷபம்: கண்ணபிரானை வழிபட வெற்றிகள் குவியும். மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் பெறலாம். கல்யாண சம்பந்தமான ஆசைகள் நிறைவேறும். மகிழ்ச்சியான காலகட்டம். உள்ளூர் வியாபாரம் சிறப்பாக இருக்கும். அலுவலக சூழல் இதமாக இருக்கும்.

மிதுனம்: தைரியம் இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செரிமானக் கோளாறு உண்டாகும். தெரு ஓரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கூடும். காரிய அனுகூலம் கிடைக்கும். பெண் தொழில் முனைவோருக்கு ஏற்றம் உண்டு.

கடகம்: மிக மகிழ்ச்சியான நாள். சுதந்திரமான எண்ணங்கள் இருக்கும். குறுக்கு வழி விஷயங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. கந்து வட்டி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. வாழ்க்கை லாபமாக இருக்க கூடிய நேரம் இது. பார்ட்னர்ஷிப் விவகாரங்களில் அனுசரித்து செல்ல வேண்டும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நீண்ட நாளைய திட்டங்கள் வெற்றியடையும். அலுவலகத்தில் முதன்மைப்படுத்தப்படுவீர்கள்.

சிம்மம்: எதையும் வெளிப்படையாக பேசக் கூடிய தன்மை உண்டு. தன லாபம் உண்டு. வியாபார முன்னேற்றம் உண்டு. எதிரிகளை வெல்லக் கூடிய தன்மை உண்டு. வேலை வாய்ப்பு கிடைக்கும். மனதில் ஏதோ ஒரு வருத்தம் இருக்கும். அன்னை ஆதிபராசக்தியை வழிபட எல்லா நன்மையும் உண்டு.

கன்னி: மிகப்பெரிய வெற்றி தரும். வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றங்கள் வரக்கூடிய காலகட்டம் வரும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் விலகும். முருகப் பெருமான் வழிபாடு தொட்டது துலங்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அமைதியாக இருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: அனுகூலமான நாள். தந்தை வழியில் நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுப செய்திகள் கூடி வரும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. சகோதரர்களுடன் தொடர்பு ஏற்படும். அலுவலக சூழல் எதிர்பார்த்தபடி இருக்கும்.

தனுசு: வம்பு செய்யக் கூடாது. பொறுமை வேண்டும். மனது கோபம் அடையும். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபப்ப்படக் கூடாது. அனுசரித்து செல்ல வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: மிகுந்த யோகமான நாள். மனைவி மீது அன்பு பெருகும். இளைஞர்களுக்கு காதல் உணர்வு அதிகரிக்கும். வருமானம் பெருகும். பிஸினஸில் அளவான முதலீடு தேவை. நல்ல ஒரு காலம்.

கும்பம்: முன்னேற்றமான நாள். வெளிநாட்டில் படிக்க நல்ல வாய்ப்பு கூடி வரும். வாழ்க்கைத் துணை வழி ஆதரவு கிடைக்கும். புதிதாக சொத்து சுகம் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாளைய திட்டம் நிறைவேறும். மனதில் நிம்மதி குடி கொள்ளும்.

மீனம்: கண்கள் தொடர்பான பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும். கண்களில் நீர்ச்சத்து குறையும். பிஸினஸில் லாபம் இருக்கும். எதிரிகளின் பலம் கூடும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நல்ல வேலை கிடைக்கும்.