யாரையும் கேலி, கிண்டல் செய்யக் கூடாது!

90

யாரையும் கேலி, கிண்டல் செய்யக் கூடாது!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்…

மேஷ ராசி அன்பர்களே: குடும்பத்தின் தேவையறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதே நேரத்தில் உடல் நலத்திலும் கவனம் தேவை. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன லாபம் உண்டு. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பதற்றம் இருக்கும். கிருத்திகை நட்சத்திரகாரர்களுக்கு மனமகிழ்ச்சி உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – முழு தொகுப்பு வீடியோ!

ரிஷபம் ராசி அன்பர்களே: குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாகன பயணத்தால் நன்மை உண்டு. வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் இனிமையான சூழல் நிலவும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய காலகட்டம். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வியாபார வளர்ச்சி உண்டு.

மிதுன ராசி அன்பர்களே: உங்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறப்பான நாள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு தன லாபம் உண்டு. குடும்பத்தில் பெண்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும் நாள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வண்டி வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன லாபம் உண்டு. புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மூலம் நட்சத்திர வியாபாரிகளுக்கு தன லாபம் உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புகழ் பெறும் யோகம் உண்டு.

மீனம் ராசி அன்பர்களே: உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு கடன் சுமை ஏற்பட வாய்ப்புண்டு.