யாரை நம்ப வேண்டுமோ, அவர்களைத் தான் நம்ப வேண்டும்!

72

யாரை நம்ப வேண்டுமோ, அவர்களைத் தான் நம்ப வேண்டும்!

செப்டம்பர் 19 ஆம் தேதியான இன்றைய (19-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும். புதிய மாற்றங்கள் வரும். பூச்சிக்கடிகளால் தொல்லை வரலாம். உடல் நலனில் அக்கறை வேண்டும். தலைவலி, காய்ச்சல் வரும். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் உண்டாகும்.

கும்பம்: எண்ணிய காரியங்கள் வெற்றி பெறும். பதற்றாம் இருக்கும். அலைச்சல் இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. தன லாபம் உண்டு.

மகரம்: பிறரை குறை சொல்லக் கூடாது. பணத்தை சேமித்து செலவு செய்யுங்கள். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப நிம்மதி உண்டு.

தனுசு: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியும் நல்லதொரு நாள். வியாபாரம் வசியமாகும். சகல காரியங்களும் அனுகூலமாக முடியும். புகழ் பெறும் யோகம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

விருச்சிகம்: எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரம், கல்வியில் முயற்சித்தால் வெற்றி.

துலாம்: நல்லதொரு நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தன லாபம் உண்டு. பதற்றம் இருக்கும்.

கன்னி: நட்பு வழியில் சிக்கல்கள் உண்டு. நெருங்கிய நண்பனே எதிரியாக வரக்கூடிய சூழல். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். யாரை நம்ப வேண்டுமோ அவர்களைத் தான் நம்ப வேண்டும்.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். மிகுந்த அனுகூலமான நாள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம்: பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகளை பேசாமல் குடும்ப வாழ்க்கையிலும், வெளியிலும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு.

மிதுனம்: மகிழ்ச்சியான நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தன லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடுமையான வார்த்தையை பேசக்கூடிய அளவிற்கு பதற்றம் இருக்கும்.

ரிஷபம்: மகிழ்ச்சியான நாள். வேலைக்கான பரிந்துரைக்காக செல்வீர்கள். வியாபாரத்தில் இதமான சூழல் அமையும். நண்பர்கள் வழியில் நற்பெயர் கிடைக்கும். வாகன யோகம் உண்டு.

மேஷம்: லாபகரமான ஒரு நாள். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரிகள், போட்டி, பந்தயங்களை அருமையாக சமாளிப்பீர்கள். சுப செய்திகள் வரும்.