ராமர் மந்திரத்தை சொல்ல வேண்டும்!

69

ராமர் மந்திரத்தை சொல்ல வேண்டும்!

அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியான இன்றைய (27-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 27 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இதமான அனுபவங்கள் சூழக்கூடிய நாள். இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். செய்தொழிலில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெருகும் நாள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் வரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. தன வரவு உண்டு. குடும்ப பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளால் நன்மைகள் உண்டு.

கும்பம்: உடல் நலனில் அக்கறை வேண்டும். பகைவர்களிடம் எச்சரிக்கை வேண்டும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மின் சாதனங்களை இயக்கும் போது கவனம் வேண்டும். ஆனந்தமான செய்திகள் வரும். பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்: முதலீட்டில் கவனம் வேண்டும். வேலை வாய்ப்பு அமையும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

தனுசு: நிறைய வெற்றிகள் வேண்டும் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல வெற்றிகள் உண்டு. ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ராமர் மந்திரத்தை சொல்ல வேண்டும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தன வரவு பெருகும்.

விருச்சிகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் எதிர்பார்த்தபடியே வெற்றி கொடுக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வரும். தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். அரசு அலுவலகத்தில் காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுமை வேண்டும். தன வரவு உண்டு. நல்ல வேலை வாய்ப்பு வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கால்களில் பாதிப்பு வரும். வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தன வரவு உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். அனுகூலமான ஒரு நாள்.

கன்னி: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மூத்த பெண்மணிகள் மூலம் உயர்வீர்கள். பதவி உயர்வு வீடு தேடி வரும். நல்ல யோகங்கள் வரும்.

சிம்மம்: மனக் கவலை மறையும். இடமாற்றம் உண்டு. விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். அமைதியாக இருப்பீர்கள். மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது. நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும்.

மிதுனம்: இனிய நாள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். வருமானம் உயரும். பேசுவதில் கவனம் வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டு.

ரிஷபம்: தன வரவு வரும். மன தைரியம் அதிகரிக்கும். உடல் அசதி கொஞ்சம் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழல்.

மேஷம்: இனிமையான வெற்றிகளை பெற்றுத் தரும் ஒரு நாள். நன்மைகள் அதிகம் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் வரும். குடும்பத்தாருடன் வெளியில் சென்று வருவீர்கள். செலவு வரும். சகல காரியங்களையும் பெற்றுத் தரும். கணவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும்.