ரிஷபம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

147

ரிஷபம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கணித்த 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலனை கணித்துள்ளார். இந்தப் பதிவில் நாம் ரிஷபம் ராசிக்கான தமிழ் மாதமான கார்த்திகை மாத ராசி பலனை பார்ப்போம்….

ரிஷபம்:

அன்பு மற்றும் அரவணைப்பால் மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். எந்த விஷயத்திலும் நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, குழப்பங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பொருளாதார தேவைக்காக கடன் வாங்க கூடிய சூழல் கூட உருவாகலாம்.

ரிஷபம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!

யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. உடன் பிறப்புகளாலும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் நல்ல ஆதாயமான பலன்கள் ஏற்படும். சொத்து விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கூட இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை தேவை.

எதிரிகளால் கூட பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவிக்கிடையில் சிறு சிறு மனக்கசப்புகள் வரும். வியாபாரத்த்ஹில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் ரீதியிலான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடக் கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் அதில், நிதானம், பொறுமை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மாற்றத்தை உண்டாக்கித் தரும்: ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

தந்தையின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பிதுர் வழி சொத்துப் பிரச்சனை உங்களுக்கு உருவாகும். பிதுர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். நண்பர்களால் நல்ல ஆதாயமான பலன்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 5, 6 மற்றும் 7.

பரிகாரம்: கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கால காலேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.