ரிஷபம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

56

ரிஷபம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தமிழ் மாத ராசி பலன் 2021

சைதை ராஜாவின் ரிஷபம் ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2021

ஐப்பசி மாத ராசி பலன் ரிஷபம் 2021….

கௌரம், செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய ஒரு நிலை. ஓரளவுக்கு பணம் வரும். இருந்தாலும் செலவு அதிகரிக்கும். செலவும், வரவும் சரிசமமாக இருக்கும். பேச்சில் எச்சரிக்கை தேவை. பிரச்சனை தானாக தேடி வரும் ஒரு மாதம். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் வேலை பார்க்க நினைக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இளைய சகோதர வழி ஆதாயம் உண்டு.

பிபிஓ, ஹார்டுவேர், சாப்ட்வேர், கொரியர் சர்வீஸ், தபால் தந்தி, விளையாட்டு வீரர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரிவில் பணியாற்றக் கூடியவர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எடிட்டர்கள், கேமராமேன்கள், பைனான்சியர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என்று எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் ஒரு சந்தோஷமாக இருப்பார்கள்.

போட்டி, பந்தயங்கள் வந்தால் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும். மருத்துவ செலவு ஏற்படும். வண்டி, வாகனங்கள் பழுது ஏற்படும். அசையா சொத்துக்கள் மூலமாக கூட செலவு வரும். தாய், தாய்வழி சொந்தங்கள் பகைமை பாராட்டுவார்கள்.

குல தெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளால் கூட பிரச்சனை வரலாம். தந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு வரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும். வெளியூர், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதன் மூலம் குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் வரும்.

காதல் வலையில் விழும் வாய்ப்பு உண்டு. திருமணமானவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். பணம் மற்றும் குடும்ப விஷயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரும்பு, இரும்பு சார்ந்த அன்பர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனை தீரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு கடனுதவி பெற்று தொழில் லாபம் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஆன்மீக பயணம், இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். இன்னும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். தந்தை, தந்தைவழி சொந்தங்களால் ஆதாயம் உண்டாகும்.

முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வரும். ஆனால், தாமதமாகும். அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் பெருகக் கூடிய ஒரு அமைப்பு இருக்கிறது. பிளாட் புரோமோட்டார்ஸ், பில்டர்ஸ், கட்டிட கலைஞர்கள், பூமி தொடர்பான வேலை செய்யும் அன்பர்கள், தரகர்கள் என்று அனைவருக்கும் உற்சாகமான ஒரு காலகட்டம்.

இந்த மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகள் சந்திராஷ்டமம் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை வேண்டாம். வண்டி, வாகனங்களை தவிர்ப்பது நல்லது. ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் வளமோடு வாழலாம்.