ரிஷப ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

21
ரிஷப ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள் 2021…

ரிஷப ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்…

நல்ல அற்புதமான மாதம். யோக பாக்கியம் கிடைக்கும். கௌரவம், புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு சேரும் ஒரு அமைப்பு. தெளிவான சிந்தனை, தெளிவான எண்ணம் மேலோங்கும். போதிய பணவரவு இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவி பரஸ்பர ஒற்றுமை, சந்தோஷம், குதூகலம் உண்டாகும். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆரம்ப கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மிகவும் சிறப்பாக படிப்பார்கள்.

மேலும் படிக்க: ரிஷப ராசி புரட்டாசி மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். எந்த முயற்சி எடுத்தாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம். பி பி ஓ, ஐடி நிறுவனம், தபால் துறை, கொரியர் சர்வீஸ், விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் என்று அனைவருக்கும் நல்ல வேலை வாய்ப்பு அமைந்து, வருமானம் அதிகரித்து சந்தோஷமாக இருப்பார்கள்.

வீடு இல்லாதவர்கள் வீடு, இடம், நிலம், பிளாட் என்று வாங்கலாம். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டாகும். படிக்கும் மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பார்கள். உள்நாட்டில் படிப்பவர்களும், வெளிநாட்டிலும் படிப்பவர்களும் ரொம்ப நன்றாகவே படிப்பார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். அரசியவாதிகளுக்கு ஆதாயம் கிடைக்க கூடிய ஒரு காலகட்டம். பூர்வீகத்தில் வீடு இருந்தால் அடிக்கடி பூர்வீக ஊருக்கு சென்று வருவீர்கள். வீடு வேலை நடக்கும்.

பெண்களால் அனுகூலம், ஆதாயம் உண்டு. வாழ்க்கைத் துணை அல்லது மனைவியால் யோகம் உண்டு. நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வெளியூர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சென்று வரலாம். ஒரு சிலர் ஆன்மீக பயணம், இன்ப சுற்றுலா என்று சென்று வருவீர்கள். சொந்த தொழில் செய்யும் அன்பர்கள் நம்பி கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தால் அந்த தொழில் நல்ல முன்னேற்றம் அடையும்.

இரும்பு சம்பந்தமான தொழில் செய்யும் அன்பர்களுக்கு ஒரு உன்னதமான மாதம். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுதல் கிடைக்கும். ஒரு சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். வேலை இழந்தவர்களுக்கும் புதிதாக வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான ஒரு சூழல் அமையும். அசையா சொத்துக்களால் செலவினங்கள் செய்யக் கூடிய ஒரு காலகட்டம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ரிஷப ராசி அன்பர்களுக்கு 25, 26, 27 ஆகிய நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் எடுக்க வேண்டும். இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு.