ரிஷப ராசிக்கு சந்தோஷத்தை அள்ளித்தரும் சனி பெயர்ச்சி 2023!

84

ரிஷப ராசிக்கு சந்தோஷத்தை அள்ளித்தரும் சனி பெயர்ச்சி 2023!

சனி பகவான் தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார். மகரம் மற்றும் கும்பம் ஆகியவை சனி பகவானின் சொந்த வீடுகள். தனது வீட்டில் இருக்கும் போது யாருக்கும் மகிழ்ச்சி, சந்தோஷம் தானே. அப்படித்தான் சனி பகவானுக்கும். ரிஷப ராசிக்கு சனி பகவான் யோகாதிபதி.

யோகத்தை தரக்கூடியவராக இந்த சனி பகவான் இருக்கப் போகிறார். கடந்த காலங்களில் தந்தை இழப்பு, வேலையில் பிரச்சனை, உறவுகளில் பிரிவு, உடல் நலக் கோளாறு என்று சிக்கி சின்னாபின்னமாகியிருப்பார்கள். தற்போது அதிலிருந்து விடுபடும் விதமாக இந்த சனி பெயர்ச்சி இருக்கப் போகிறது.

For Full Video, Click Here: ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் 2023!

பெயர்ச்சி நிகழ்வதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக அதற்கான பலன்களை கொடுக்க ஆரம்பித்துவிடுவார். அந்த வகையில் தற்போது சுப செய்திகள், வேலை மாற்றம், நல்ல வேலை என்று அமைந்து வருகிறது. மனதிலுள்ள நெருக்கடி நீங்கும். பத்தில் ஒரு பாவக் கிரகம் அமர வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது சனி பகவான் ரிஷப ராசிக்கு 10 ஆம் இடத்தில் அமருகிறார். இதனால், நல்ல வேலை மாற்றம் உருவாகும். நல்ல சூழல் உருவாகும்.

அலுவலகத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். சொந்த ஜாதகத்தில் புதிய வேலையில் சேரலாம் என்று இருந்தால் புதிய வேலையில் சேருங்கள். குடும்பத்தில் வாக்கு, வாதங்களை தவிர்ப்பது நல்லது. கருத்து வேறுபாடு இருந்து வரும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வரும். பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்.

Also Read This: Dhanusu Rasi Sani Peyarchi Palan – தனுசு ராசிக்கான 2023 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி பலன்கள்!

பணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். ஒட்டு மொத்தமாக பெரிய தொகை வரும். புதிதாக வீடு, மனை வாங்கும் கால கட்டம் வரும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனை வரலாம். தாயாரது உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

குடியிருக்கும் வீட்டில் பராமரிப்பு பணி செய்வீர்கள். பழைய வீட்டை வாங்கும் யோகம் உண்டு. உடல் நல பிரச்சனை நிவர்த்தியாகும். பிஸினஸில் அதிக லாபம் உண்டு. மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். படிப்பில் தடைகள் இருக்கும்.

Read This: மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

மூத்தவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். முதியோர் இல்லங்களில் இருக்க விரும்புவீர்கள். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்ல வேண்டும். அடிவயிறு பிரச்சனை இருக்கும். பித்தப்பை பிரச்சனை இருக்கலாம். ஹார்மோன் பிரச்சனை தலை தூக்கும். காவல் தெய்வங்களை வழிபட வேண்டும். அலுவலகத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, மனை, கார் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள் கார் ஓட்ட கற்று கொண்டு அலுவலகத்திற்கு காரில் சென்று வருவீர்கள். குபேர யோகம் தரும் ஒரு காலட்டம். மிகச்சிறந்த வெற்றி உண்டாகும்.