வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும்!

79

வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும்!

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியான இன்றைய (05-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 05 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நாள். மகன், மகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. உங்களுக்கு எதிரான பிரச்சனை தீரும். தன லாபம் உண்டு. பழி, பாவங்களில் மாட்டிக் கொள்ளும் சூழல் உண்டாகும்.

கும்பம்: இனிய நாளாக வாழ்க்கையில் அமைகிறது. அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. சொத்து பிரச்சனை வரும். தன லாபம் உண்டு. தந்தையின் உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும்.

மகரம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலக் குறைவு இருக்கும். சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியில் உயர்வு ஏற்படும்.

தனுசு: எழுத்தாளர்கள் புகழ் பெறும் நாள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நற்பெயர் பெறும் நாள். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனை வரும். பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். நல்ல தன லாபம் உண்டு.

விருச்சிகம்: வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். விஞ்ஞானிகள் பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்: அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. பிறரது குற்றங்களை பார்க்கும் போது தனது குற்றம் பார்த்தால் வாழ்க்கை வீணாகிவிடும். குல தெய்வ வழிபாடு மேகொண்டால் நன்மை உண்டாகும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டும். மன அமைதி இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: இனிய நாள். பகலில் பதற்றம் இருக்கும். மாலையில் மகிழ்ச்சி இருக்கும். கல்வியில் சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன லாபம் உண்டு. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். காது, மூக்கு, தொண்டை பிரச்சனை வரலாம். தன லாபம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மிதுனம்: உங்களது செயல்கள் தான் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நல்ல மனிதராக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல தனலாபம் உண்டு. கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிறரது விஷயத்தில் தலையிடக் கூடாது. அனுகூலமான நாள்.

ரிஷபம்: எண்ணங்கள் பூர்த்தியாகும் ஒரு அற்புதமான நாள். குல தெய்வத்தின் ஆசி உண்டு. எண்ணிய எண்ணங்கள் வெற்றியடையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் வளர்ச்சியடையும். தன லாபம் பெருகும்.

மேஷம்: குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் நன்றாக நடக்கும். கடன் வாங்கி கூட வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வரும். https://www.youtube.com/watch?v=OprmEQeOUJo