வரி தொடர்பான பிரச்சனை வரலாம்!

38
இன்றைய ராசிபலன்

வரி தொடர்பான பிரச்சனை வரலாம்!

நவம்பர் 26 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (26-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அனுகூலமான நாள். புகழ் பெறக் கூடிய யோகம் உண்டு. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. வெளிநாட்டில் இருப்பவர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். விநாயகரை வழிபட வேண்டும்.

ரிஷபம்: பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது. பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. தன வருமானம் பெருகும்.

மிதுனம்: குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் வழிபாடு வெற்றி தரும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். கல்யாண தடை விலகும். கடனுதவி கிடைக்கும். பிஸினஸ் வளர்ச்சி உண்டு.

கடகம்: வெற்றிகள் பெருகும் அற்புதமான நாள். உடல் நலனில் அக்கறை தேவை. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

சிம்மம்: மிகப்பெரிய அனுக்கிரகம் உண்டு. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். சந்தோஷமாக செலவு செய்வீர்கள். பூமி யோகம் உண்டு. விருத்தியான ஒரு நாள்.

கன்னி: புதிதாக வீடு மனை வாங்க முயற்சித்தால் வெற்றி உண்டு. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். நல்ல வருமானம் வரும். பயணங்களினால் சந்தோஷம் நிலவும்.

துலாம்: வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள கூடாது. குடும்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் பாசம் அதிகரிக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும்.

விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். வரி பிரச்சனை வரலாம். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: வெற்றிகள் பெருகும் அருமையான நாள். நெருக்கடிகள் இருக்கும். சந்தோஷமும் நிலவும். தன லாபம் வரும். மனதிற்கு மகிழ்ச்சி உண்டு.

மகரம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும். சகோதர வழி உறவு மேம்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். எதிர்பார்க்கும் முன்னேற்றம் தேடி வரும்.

கும்பம்: எங்கும் எதிலும் வெற்றிகள் பெருகும் அருமையான நாள். லாபமான நாள், குடும்பத்து உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எண்ணிய காரியங்கள் வெற்றியடையும்.

மீனம்: அனுகூலங்கள் நிறைந்த நாள். முன்னோர்களின் அனுக்கிரகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.