வரி வருவாயை முழுமையாக கட்டி விட வேண்டும்!

118

வரி வருவாயை முழுமையாக கட்டி விட வேண்டும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்….

மேஷம்: வெளிநாட்டு யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, நல்ல வேலைவாய்ப்பு அமையும். இந்த நாளில் வரலட்சுமி விரதம் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு.

ரிஷபம்: கண்டிப்பாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டும். பலரது வாழ்க்கையில் திருமணம் என்பது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த பணம் வசூலாகும்.

மிதுனம்: வளர்பிறை பிரதோஷம் மற்றும் வரலட்சுமி விரதம் இந்த இரண்டையும் கடைபிடிக்க வேண்டும். சிவபுராணம் படிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி, வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு.

கடகம்: வெளிநாட்டு வாய்ப்பு, திருமணம் கூடி வருதல், நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஞாபகத் திறன் வளரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: இன்று உங்களுக்கு சிவராஜ யோகம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசிலே உயர் பதவிகள், அரசியல்வாதிகளுக்கு உயர்வுகள், ஆட்சியாளர்களுக்கு உயர்வுகள் என்று அமையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி: நலம் தரும் நல்லதொரு நாள். மாடி வீடு கட்டும் யோகம் உண்டு. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. நிர்வாகம் தொடர்பான படிப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

துலாம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகள் வந்து குவியும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு.

விருச்சிகம்: நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சொல்லுக்கு மதிப்பு உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் எளிதாகும். மாணவர்களுக்கு நல்ல கல்வி சூழல் அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

தனுசு: குடும்பத்தில் மேன்மைகள் உண்டு. உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நல்ல தனலாபம் உண்டு.

மகரம்: அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கூடி வரும் நாள். வியாபாரிகள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வருவாயை முழுமையாக செலுத்திட வேண்டியது அவசியம். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. அந்நிய தேசத்தில் வியாபாரம் செய்வதற்கு வாய்ப்புகள் கூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

மீனம்: அலுவலகத்தில் இருக்கும் சிரமங்கள் மறையும். கூடுதல் வெற்றிகள் கிடைக்கும். பூச்சிக்கடி தொந்தரவுகள் இருக்கலாம். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். கல்விக்கு தேவையான கடனுதவி கிடைக்கும். உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.