வறுமை, கடன், நோய் தீர அனுமன் வழிபாடு!

35

வறுமை, கடன், நோய் தீர அனுமன் வழிபாடு!

லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும்.

ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.

அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அதன் படி, தற்போது விருச்சிகம் ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

விருச்சிக ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

 1. தினந்தோறும் காலையில் தேன் சாப்பிடுவது நல்லது.
 2. அரச மரம் மற்றும் முள் செடிகளை நீங்கள் வெட்டக் கூடாது.
 3. வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
 4. சிகப்பு நிற கைக்குட்டை மற்றும் டை உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.
 5. வீட்டில் பால் காய்ச்சும் போது பொங்கி கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 6. இனிப்பு ரொட்டி செய்து அதனை சாதுக்கள், மகான்களுக்கு கொடுக்கலாம்.
 7. வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாகும்.
 8. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தோறும் தேன், சிகப்பு ரோஜா, குங்குமம் இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
 9. சகோதரர்களின் மனைவியுடன் சண்டை வேண்டாம்.
 10. சகோதரர்களிடம் மரியாதையோடு நடக்க வேண்டும்.
 11. செவ்வாய் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்கு சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
 12. வறுமை, கடன், நோய்கள் நீங்கி வாழ்வில் நலம் பெற செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு செந்தூரம், ஆடை சாற்றி வழிபட வேண்டும்.
 13. யாரிடமும் இலவசமாக எதையும் வாங்க கூடாது. அப்படி வாங்கினால், பதிலுக்கு ஒரு பொருள் கொடுக்க வேண்டும்.