வழக்குகள் சாதகமாக முடியும்: தனுசு ராசி ஆவணி மாத ராசி பலன்!

44

வழக்குகள் சாதகமாக முடியும்: தனுசு ராசி ஆவணி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தனுசு ராசி ஆவணி மாத ராசி பலன்…

ஓரளவு திருப்திகரமான ஒரு சூழல். போதுமான பண வரவு உண்டு. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். பணப்பற்றாக்குறை இருக்காது. லாபம் உண்டு. செல்வம், செல்வாக்கு பெருகும் ஒரு மாதம். தாயாரின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கொஞ்சம் அக்கறையுடன் படித்தால் தேர்ச்சி பெற முடியும்.

வண்டி, வாகனங்கள் செலவு வைக்கக் கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. வண்டி, வாகனங்களில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளக் கூடிய உன்னதமான ஒரு மாதம். வெளிநாட்டில் படிப்பவர்கள் சிறப்பாக படித்து முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஒரு மாதமாக இந்த மாதம் அமைகிறது.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தனுசு ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை அகலும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் வரும். சொந்தத் தொழில் செய்யும் அன்பர்களுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் கிடைப்பார்கள். இந்த மாதம் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கும். கணவன் – மனைவி பரஸ்பரம், ஒற்றுமை, சந்தோஷம், குதூகலம், நிம்மதியாக இருக்க கூடிய ஒரு மாடம்.

நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அக்கம் – பக்கம், சொந்த பந்தம், அலுவலகத்தில் சக பணியாளர்கள் என்று அனைவரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரியாக இருக்க வேண்டும். கௌரவத்திற்கு பங்கம் ஏற்படலாம். அவமானம், அசிங்கம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மீறினால், வம்பு, வழக்கு என்று காவல் நிலையம், நீதிமன்றம் சென்று வர வேண்டி வரும். எதிலும் எச்சரிக்கை தேவை. எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்கும். தந்தைக்கு பேரும், புகழும் கிடைக்கும். இடம் வாங்கி, விற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வேலையிழந்தவர்களுக்கும், வேலை இல்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான ஒரு மாதம். வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பான ஒரு மாதம். முதல் திருமணம் முறிவு ஏற்பட்ட 2ஆவது திருமணத்திற்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி கண்டிப்பாக சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்துவார்கள்.

மூத்த சகோதரர்கள் இருந்தால் அவர்களால் ஆதரவு உண்டு. எண்ணிய செயல் ஈடேறும் ஒரு நிலை. ஆன்மீக சிந்தனை மேலோங்கி ஆலய வழிபாடு செய்வீர்கள். நன்கொடை வழங்கி மகிழ்வீர்கள். மொத்தத்தில் தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த ஆவணி மாதம் அற்புதம் நிறைந்த சிறப்பான மாதமாக அமைகிறது.