வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்!

30

வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்!

ஜூலை 24 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (24-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். மாற்றங்களை சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

ரிஷபம்: மன தைரியம் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை இருக்கும்.

மிதுனம்: பேச்சில் நெளிவு, சுளிவு இருக்கும். யாரையும் காயப்படுத்தக் கூடாது. கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். உறவுகளால் நன்மை நடக்கும்.

கடகம்: அறிஞர்களாக நடந்து கொள்வீர்கள். அறிவு பெருகும். பயணங்களால் லாபம் உண்டு. தொட்டது துலங்கும்.

சிம்மம்: அற்புதமான நாள். விஐபிகளின் நெருக்கம் இருக்கும். யாரையும் காயப்படுத்தக் கூடாது. வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

கன்னி: மிக நல்ல நாள். மிகச்சிறந்த நல்ல நாள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பொறுமையாக செயல்பட வேண்டும். வேலைப்பளு இருக்கும். யாரையும் விமர்சிக்க கூடாது. மன அழுத்தம் இருக்கும். யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். யாரையும் விமர்சிக்க கூடாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது. விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிகம்: உடல்நலனில் கவனம் தேவை. மெடிக்கல் அட்வைஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. குரு பகவான் நம்மை காப்பாற்றுவார். பதவிகள், பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு: உடல் நலனில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குல தெய்வ அனுக்கிரகம் உண்டு. குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

மகரம்: வியாபார தொடர்புகள் விரிவடையும். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ள கூடாது. உடல் நலனில் கவனம் தேவை.

கும்பம்: ஏராளமான நன்மைகள் நடக்கும் நல்லதொரு நாள். வீடு கட்டும் யோகம் உண்டு. வீட்டிற்கு தேவையான கடனுதவி கிடைக்கும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்: அதிர்ஷ்டகரமான நாள். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும் உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாய்வு தொந்தரவு இருக்கும்.