வாக்கு, வாதங்களை தவிர்ப்பது நல்லது!

35

வாக்கு, வாதங்களை தவிர்ப்பது நல்லது!

அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியான இன்றைய (27-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 27 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெற்றிகள் குவியும்.

கும்பம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் நல்லதொரு நாள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். மனக் கஷ்டங்கள், போராட்டங்களில் பொறுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தன வரவு உண்டு.

மகரம்: கால்களில் பிரச்சனை வரலாம். ஐயப்பன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் கூடுதல் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களினால் முக்கியமான காரியங்களை மறந்துவிடக் கூடாது. வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

தனுசு: இனிய நாள். தொட்டது துலங்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: உங்களது தீர்க்கமான கொள்கை உங்களை உயர்த்தும். வாழ்க்கையில் பல மாற்றங்களை உயர்த்தும். கால்களில் பிரச்சனை இருக்கும். கண் திருஷ்டி அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு. தன வரவு அதிகம் உண்டு. அளவான நன்மைகள் உண்டு.

கன்னி: எல்லா பிரச்சனைகளும் சாமர்த்தியம், தைரியத்தால் வெற்றி பெறும். நினைத்த காரியங்கள் கைகூடும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவீர்கள்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நிவர்த்தியாகும். மதிப்பு, மரியாதை உயரும், வாய்க்கால் வரப்பு பிரச்சனை தீரும். பிறரது விஷயத்தில் தலையிடக் கூடாது.

கடகம்: திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். போனஸ் கிடைக்கும். வாக்கு, வாதங்களை தவிர்ப்பது நல்லது. தொட்டது துலங்கும் அற்புதமான நாள்.

மிதுனம்: அனுபவத்தின் முதிர்ச்சி வெளிப்படும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு. தன வரவு உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும்.

ரிஷபம்: சுபமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். கவலைகள் மறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும். தன வரவு. அன்பு மேலோங்கும். கணவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம். யாரையும் விமர்சிக்க கூடாது.

மேஷம்: எம்பெருமானின் அனுக்கிரகத்தால் பிஸினஸில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த தகராறு நிவர்த்தியாகும். சுபச் செய்திகள் வரும். பிறரது விஷயத்தில் தலையிடக் கூடாது. கணவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும்.