வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசாக மாறும் யோகம் உண்டு!

51

வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசாக மாறும் யோகம் உண்டு!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் கடகம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

அற்புதங்கள் நிறைந்த மாதம். ஒரேயொரு சிக்கல் தான் உண்டாகும். அதுவும் ஒரு சிலருக்கு உடல்நிலையில் பிரச்சனை வரலாம். மந்தமான ஒரு நிலை இருக்கும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது தெரியாது போன்ற ஒரு குழப்பமான நிலையில் இருப்பீர்கள்.

பணம் பல வகைகளிலிருந்து பையை நிரப்பும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு அதற்கான பேச்சுவார்த்தை நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு அதிகாரிகளுக்கு ஒரு அற்புதமான மாதம். தந்தைக்கு கௌரவம், புகழ், அந்தஸ்து உயரும். கட்டிட வேலை செய்பவர்கள், பிளாட் புரோமோட்டார்ஸ் என்று கட்டிடம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து நல்ல சம்பாத்தியம் பெருகும் ஒரு மாதம்.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் ரிஷப ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

உங்களது சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கூடும். அனைத்து துறையிலும் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து சம்பாத்தியம் அதிகரிக்கும் ஒரு அற்புதமான மாதம். இளைய சகோதர வழியில் ஆதரவு உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் இருக்கிறது. வண்டி வாகனங்களை மாற்றியமைப்பீர்கள்.

வீடு இல்லாதவர்கள் வீடு வாங்கும் யோகம் உண்டு. தாயாரின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளக் கூடிய உன்னதமான ஒரு மாதம். படித்து முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

கணவன் – மனைவி உறவில் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்பு உண்டு. நட்பு வட்டம், அலுவலகம், வெளிவட்டாரங்களில் பகை நிலை பாராட்டுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்கள் கூட எதிரிகளாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கைத் துணை மட்டுமல்லாமல், பிஸினஸில் கூட்டாளிகள் கூட விரோதிகளாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதைத் தவிர மற்ற அனைத்திலும் கடக ராசிக்கு ஆவணி மாதம் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது.

கடன்கள் வசூலாகும் நிலை. வாரிசு இல்லாத குடும்பங்களுக்கு உங்களை வாரிசாக தேர்ந்தெடுத்து, அவர்களது சொத்துக்களை உங்களது பெயரில் மாற்றி எழுதக் கூடிய விபரீத ராஜயோகம் ஒரு சிலருக்கு அமையக் கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் அமைகிறது.