வாழ்க்கையில் உயர திட்டம் போடுவீங்க!

143

வாழ்க்கையில் உயர திட்டம் போடுவீங்க!

செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்றைய (18-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 18 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: புதிய மாற்றங்கள் வரும். தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும். முன்னேற்றகரமான நாள்.

கும்பம்: மனமகிழ்ச்சியான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். சந்தோஷமான அனுபவங்கள் உண்டு. பெரியவர்களுக்கு வாந்தி, மயக்கம் வரும்.

மகரம்: இனிய நாளாக, தன வரவு கொண்ட நாளாக அமையும். குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு: மகிழ்ச்சியான நாள். மாலைப் பொழுதில் வெற்றிகள் குவியும். காலையில், பண வரவுக்கான முயற்சியில் ஈடுபடலாம். வியாபாரம் வெற்றியடையும். தன வரவு உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

விருச்சிகம்: மகிழ்ச்சியான நாள். வீடு கட்டும் எண்ணம் மேலோங்கும். கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.

துலாம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் ஒரு நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு தொட்ட காரியங்கள் துலங்கும். கம்பியூட்டர் துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கன்னி: வாழ்க்கையில் மென்மேலும் உயர திட்டங்கள் தீட்டுவீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள். மனதில் கோபம் அதிகமாக இருக்கும். வயிற்று பிரச்சனை வரும். மாணவர்களுக்கு இனிமையான நாள். வியாபாரிகளுக்கு சுற்றுப்புறச் சூழல் உதவியாக இருக்கும்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் சிக்கலிருந்தால் விலகும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். வாஸ்து தோஷம் இருந்தால் உரிய ஜோதிட ஆலோசனை பெற்று சரி செய்து கொள்ள வேண்டும்.

கடகம்: காலைப் பொழுது அருமையான பொழுது. மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இனிமையான சூழல் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி பெறும். பிற்பகலுக்குப் பிறகு மிகச்சிறந்த வெற்றிகள் வரும். காலையில் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். குடும்பம், வியாபாரம் என்று அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: அனுகூலமான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். மனதில் மகிழ்ச்சி தங்கும். வியாபார தொடர்புகள் விரிவடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

மேஷம்: பொன்னான நாளாக அமைகிறது. நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபாரிகளுக்கு மெத்தனப் போக்கு விலகும். மாணவர்களுக்கு கல்வியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

https://www.youtube.com/watch?v=BLzUuYVhSEg