வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

110

வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியான இன்றைய (13-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 13 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: அற்புதமான நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தன வரவு உண்டு. ஓவியர்கள், கலைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறும் நாள். வியாபாரம் பெருகும்.

கும்பம்: வண்டி, வாகனங்களில் கவனம். வியாபாரத்தில் அதன் நுணுக்கங்கள் அறிந்து செயல்பட வேண்டும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எண்ணிய காரியங்கள் வெற்றியடையும். குல தெய்வ வழிபாடு வெற்றி தரும்.

மகரம்: சிவபெருமானை வழிபட வாழ்வில் எல்லா மேன்மையும் உண்டாகும். பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. தந்தையின் உடல் நலனில் அக்கறை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.

தனுசு: பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். பயணத்தில் பதற்றம் இருக்கும். உடல் நலனில் ஒரு பதற்றம். அலுவலகத்தில் ஒரு பதற்றம் என்று இருந்து கொண்டே இருக்கும். ஷீரடி பாபாவை வழிபட வேண்டும். எதிர்பார்க்கும் அத்தனை காரியங்களும் வெற்றி பெறும். பிறர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

விருச்சிகம்: பெண்கள், தங்களது உடல் நலனில் அக்கறை வேண்டும். ஹார்மோன் பிரச்சனை வரும். வேலை பார்க்கும் இடத்தில் கருத்து வேறுபாடு வரலாம். நெஞ்சக நோய் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

துலாம்: மன ஆறுதல் உண்டாகும். இன்று நேர்காணலுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையை புரிந்து கொள்வீர்கள். தன வரவில் தடை உண்டு. வாராஹியை வழிபட வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். இடமாற்றம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தடைபட்ட விஷயங்கள் நடக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். பயணங்களிலும் கவனம் தேவை. சகோதரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு. புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்: இதமான சூழல் உருவாகும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு உண்டாகும். நல்ல பொருளாதார உயர்வு ஏற்படும். அளவான நன்மை ஏற்படும்.

கடகம்: அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். அக்கம் பக்கத்தினரிடையே நல்ல உறவுகள் மலரும். சகோதரனுக்கு உதவி செய்வீர்கள். தொட்டது எல்லாம் வெற்றி தரும்.

மிதுனம்: ஏற்றம் தரக்கூடிய நாள். சுகமான அனுபவங்கள் உண்டாகும். வியாபாரத்தில் மிகச்சிறந்த மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஒரு பிடிப்பு ஏற்படும். அலுவலகத்தில் பிரச்சனை செய்தவர் பணிமாறுதல் பெற்று செல்வார். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. கனவு தொல்லை வந்து செல்லும்.

ரிஷபம்: எதைச் செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும். திட்டமிட்டு செய்ய வேண்டும். அற்புதமான காலகட்டம். பயணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி நலன் பெருகும். பூர்வீக சொத்து வந்து சேரும்.

மேஷம்: வியாபாரிகளுக்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். பணிமாற்றம் உண்டாக வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை. வம்பு, வழக்குகளில் தலையிடாமல் இருந்தால் நல்ல நாள். தான, தர்மங்கள் செய்வதால் தலைசிறந்த நாளாக அமையும். https://www.youtube.com/watch?v=mPrQvcK-22I