வாழ்க்கை துணையை தானாக தேர்வு செய்வீர்கள்!

47

வாழ்க்கை துணையை தானாக தேர்வு செய்வீர்கள்!

மே 28 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (28-05-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மிகச்சிறந்த வெற்றிகளை பெறும் அற்புதமான நாள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்: மிகச்சிறந்த யோகமான நாள். சகோதரர்களால் யோகம் உண்டு. பிசினஸில் முன்னேற்றம் உண்டு. ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.

மிதுனம்: யோகமான ஒரு நாள். மிகச்சிறந்த வெற்றி உண்டு. தொழில் முறைகளில் வெற்றி உண்டு. கலைஞர்களுக்கு ஏற்றமான நாள். நாடக வாய்ப்பு, பட வாய்ப்பு வரும். குரு மங்கள யோகத்தால் தொழில், வேலை அமையும். ஏராளமான நன்மைகள் நிறைந்த நாள்.

கடகம்: லாபமான நாள். நிறைய நன்மைகள் வரும். முருகப் பெருமானின் வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிம்மம்: மிக மிக அருமையான நாள். நல்ல உத்தியோகம் அமையும். வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். தொழில் முனைவோர் ஏற்றம் பெறுவீர்கள். யோகமான நேரம். அரசு வழி உதவிதொகை கிடைக்கும். சகோதர உறவில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி: குரு மங்கள யோகம் உண்டு. கல்யாணம் கை கூடி வரும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். தந்தை வழி உறவுகளால் நன்மைக் உண்டு. நீதிபதியின் கருணை உண்டு. நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அருமையான நாள். நல்ல உத்தியோகம் அமையும். காதல் திருமணம் கை கூடி வரும். கல்யாண வாழ்க்கையில் ஏமாற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தந்தை வழி உறவுகளில் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம்.

விருச்சிகம்: அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நோய், நொடி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: யோகமான காலகட்டம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் எண்ணங்கள் பெருகும் நாள். வாழ்க்கைத்துணையை தானாக தேர்வு செய்வீர்கள். குல தெய்வத்தின் ஆசிர்வாதம் இருக்கு. குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

மகரம்: யோகமான நாள். திருமண விசயங்கள் கூடி வரும். விரும்பிய வரன் அமையும். தந்தையின் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. பழைய வீடு, நிலம் விற்கும் சூழல் நிலவும். பயணங்கள் வெற்றி தரும்.

கும்பம்: மிக மிக நல்ல நாள். நல்ல தன புழக்கம் இருக்கும். பண வரவு இருக்கும். திடீரென்று பணம் வரும். வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. வீடு கட்டும் யோகம். சொத்து, சுகம் பெருகும் காலகட்டம்.

மீனம்: மிக மிக நல்ல நாள். குரு மங்கள யோகம் உண்டு. பிஸினஸில் நல்ல வளர்ச்சி உண்டு. வாழ்க்கையில் நல்ல உயர்வு கிட்டும். இறைவனின் ஆசிர்வாதம் உண்டு. வியாபாரம் தொடர்பான முயற்சி வெற்றி பெறும். நல்ல வேலை கிடைக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் சில தடைகள் இருக்கும்.