விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்!

68

விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்!

அக்டோபர் 10 ஆம் தேதியான இன்றைய (10-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 10 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. விடுமுறை நாளாக இருந்தாலும் சிலருக்கு வேலைப்பளு இருக்கலாம். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வரவுகள் உயரும். தன லாபம் உண்டு.

கும்பம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் நல்லதொரு நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தினரால் ஏற்பட்ட சோதனைகள் விலகும். தர்ம சங்கடங்களில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.

மகரம்: சந்தோஷமான அனுபவங்கள் உண்டு. குடும்பத்தினரால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். கடன்கள் அடைய திட்டம் வகுப்பீர்கள்.

தனுசு: புதிய வரவுகள் உண்டு. புதிய நண்பர்கள் உண்டு. புதிய லாபங்கள் உண்டு. யாருக்கும் ஆதரவு தர வேண்டாம். தன லாபம் உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: அபூர்வமான வெற்றிகள் வந்து சேரும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அளவான நன்மைகள் உண்டு.

துலாம்: குடும்பத்தில் வாக்கு வாதங்கள் வரும். தன லாபம் உண்டு. வியாபாரத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அடிவயிறு பிரச்சனை வரலாம். புதிய நபர்களால் தொல்லை வரலாம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அற்புதமான நாள். வெற்றிகள் குவியும். அக்கம் பக்கத்தினரிடையே ஒற்றுமை உண்டு. நல்ல தனலாபம் உண்டு. காரியங்கள் லாபமாக முடியும். வீடு கட்டும் முயற்சி தெளிவாகும்.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வரலாம். தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரம் தொடர்பாக நல்ல செய்தி வரும். தன லாபம் உண்டு.

கடகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும். விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். மிகச்சிறந்த வெற்றிகளை தரும். எதிரிகள் தொல்லை இருக்கும். கணவன் – மனைவி உறவில் மகிழ்ச்சி இருக்கும்.

மிதுனம்: அருமையான நாள். பகைவர்கள் கூட நண்பர்களாக மாறும் நாள். வியாபாரத்தில் வெற்றி உண்டு. மாணவர்கள் கல்வியில் கண்ணும் கருத்துமாக படித்தால் வெற்றி உண்டு. தொட்ட காரியங்கள் துலங்கும்.

ரிஷபம்: அற்புதமான நாள். மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் வெற்றி. ஏராளமான நன்மைகள் கூடி வரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாகும்.

மேஷம்: புதிய முயற்சிகளை தள்ளி போடலாம். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வரலாம். பயணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். தன லாபம் உண்டு. செய்யும் காரியங்களில் நிதானம் தேவை.