விநாயகர் வழிபாடு ஆறுதல், வெற்றி தரும்!

65

விநாயகர் வழிபாடு ஆறுதல், வெற்றி தரும்!

ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (15-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பயணங்கள் இருக்கும். இடமாற்றம் இருக்கும். இசைக்கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்பு. குடும்ப நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றி தரும். அலுவலக சூழல் இருக்கும். வேலை மாற்றம் இருக்கும். விநாயகரை வழிபட வேண்டும். நந்தியம் பெருமாளையும், திருவையாறு ஐயாரப்பனையும் வழிபட வேண்டும்.

ரிஷபம்: பணம் சம்பாதிக்க ஆசை வரும். வாழ்க்கையில் சுகங்களை அனுபவிக்க ஆசை வரும். தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நல்ல காரியத்தைப் பற்றி பேச்சுக்கள் உண்டாகும். தாயாரது உடல்நலன் குறித்த கவலை நிவர்த்தியாகும்.

மிதுனம்: தான, தர்மங்கள் நல்ல வாழ்க்கை தரும். அன்னதானம் செய்ய வேண்டும். ஒரு கைப்பிடி அளவு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு சாப்பிட வேண்டும். அற்புதமான நாள். வருமானம் பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி பெருகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு பிரச்சனை கொடுத்த உயர் பதவியில் இருந்தவர்கள் இடமாற்றம் அடைவார்கள்.

கடகம்: இறை வழிபாடு செய்ய வெற்றி உண்டாகும். விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். ஆறுதல், தெளிவு உண்டாக்கும். மனைவியை நேசிக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்: சக்தி வழிபாடு செய்ய ஏற்ற நாள். எதையும் வெளிப்படையாக சொல்லக் கூடாது. பணியாற்றுபவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கை துன்பம் நீங்க மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாயாரது உடல் நலனில் கவனம் தேவை.

கன்னி: ஏராளமான நன்மைகள் நிறைந்த நாள். வாழ்க்கையின் அருமை தெரியும். பிஸினஸ் முன்னேற்றம் உண்டு. சொத்து வாங்கும் யோகம் உண்டு. செல்வ வளர்ச்சி உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: உடல் நலனில் அக்கறை தேவை. பகைவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கெட்டவர்களை விட்டு விலகுவீர்கள். விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

விருச்சிகம்: வலிமை பெருகும் நாள். புதிதாக சொத்து சுகம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டு பிரச்சனை நிவர்த்தியாகும். வெளிநாட்டில் வாழும் வாய்ப்பு உருவாகும். கல்வி முன்னேற்றம் உண்டு.

தனுசு: சுக போகத்தை தரும் நாள். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. கண்களில் பாதிப்பு வரலாம். வாழ்க்கையை வெல்வீர்கள். நாவடக்கம் தேவை. பிஸினஸில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: வியாபார நலன் பெருகும் நாள். உடல் நலனில் அக்கறை தேவை. எதிர்பார்க்கும்படி வேலை கிடைக்கும். வேலையிலிருந்து ஓய்வு பெற எண்ணம் வரும். நகை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்: பிறர் பேசுவதை ரசிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. கேள்வி ஞானம் உண்டு. தன வருமானம் பெருகும். உடல் நலனில் அக்கறை தேவை. மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அவரே பகையாக தெரியக் கூட நிலை வரும்.

மீனம்: நல்ல எண்ணங்கள் வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். ஆனால், ஏதோ ஒரு நெருக்கடி இருக்கும். வியாபாரத்திற்கு தேவையான கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு அற்புதமான நாள்.