வியாபாரிகளுக்கு வெற்றி உண்டு!

33

வியாபாரிகளுக்கு வெற்றி உண்டு!

டிசம்பர் மாதம் 05 ஆம் தேதியான இன்றைய (05-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (டிசம்பர் 05 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: நல்ல நல்ல செய்திகள் வரும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்: எதையும் நிதானமாக செய்ய வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.

மிதுனம்: வீட்டுப் பிள்ளைகளை கண்டிக்க கூடாது. குறை காணக் கூடாது. பிள்ளைகள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பொருள் வரவு உண்டு.

கடகம்: எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வேலை வாய்ப்பு விஷயத்திற்காக யாரையும் சந்திக்கலாம். கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். தன வரவு உண்டு.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். சுபச் செய்திகள் தேடி வரும். பிறந்த வீட்டாரால் நன்மைகள் நடக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. புதிய வேலை வாய்ப்பு விஷயத்திற்கு யாரையும் சந்தித்தால் வெற்றி உண்டு. அக்கம் பக்கத்தாரை பகைத்துக் கொள்ளக் கூடாது. செயல்பாடுகளில் நேர்மையாக இருக்க வேண்டும்.

துலாம்: தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கிறது. நல்ல நல்ல செய்திகள் தேடி வரும். தன லாபம் உண்டு. உடல் நலனில் பாதுகாப்பு தேவை. எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: இறை வழிபாட்டினால் நன்மை உண்டாகும். தன வரவு உண்டு. நண்பர்கள் உதவி செய்வார்கள்.

தனுசு: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். நெருக்கடிகள் இருந்து கொண்டே இருக்கும். அளவான வெற்றி உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரிகளுக்கு வெற்றி உண்டு.

மகரம்: நிறைய மாற்றங்கள் உருவாகும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். செலவு அதிகரிக்கும். மருத்துவர் ஆலோசனை அவசியம் தேவைப்படும்.

கும்பம்: எண்ணிய காரியங்கள் இனிமையாக முடியும். காரியத்தடைகள் உண்டாகும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். கால் பகுதிகளில் பிரச்சனை வரலாம். நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள்.

மீனம்: புதிய வேலை வாய்ப்பு முயற்சிகள் வெற்றி தரும். செயல்கள் கண்காணிக்கப்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு கூடும். தன லாபம் அதிகரிக்கும்.