விருச்சிகம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

94

விருச்சிகம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அக்டோபர் மாதத்திற்கான 12 ராசிகளுக்கான ராசி பலன்….

விருச்சிகம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021….

மேலும் படிக்க: விருச்சிகம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் – வீடியோ!

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் நிதானமாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். காரில் பயணம் செய்பவராக இருந்தால் பொறுமையாக மனம் பதற்றமில்லாமல் ஓட்டி சென்று வர வேண்டும்.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் மிகவும் அற்புதமாக இருக்கும். 11 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் சங்கடங்கள், பிணக்குகள் இருந்தாலும் எந்த பாதிப்பும் வராது. வேலை வாய்ப்பு கை கூடும். மன தெளிவு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு பிரயாணங்கள் நன்மை தரும். குழந்தைகள் சொல்படி நடப்பார்கள்.

சொந்தமாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. மன உளைச்சல் தீரும். முதுகு வலி இருந்தாலும் சரியாகும். எப்பொழுதும் இரவு நேரங்களில் மூச்சு பயற்சி செய்த பிறகு தூங்க செல்ல வேண்டும். இந்த மாதம் ஒரு திருப்பு முனையான ஒரு மாதமாக இருக்கும்.   இந்த மாதம் கிரகத்தின் சுழற்சி சாதகமாக இருப்பதால், 100க்கு 98 சதவிகிதம் பரிபூரண நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். https://www.youtube.com/watch?v=eDE9Om3uEzc