விருச்சிகம் ராசி: ஆகஸ்ட் மாத ராசி பலன்!

96

விருச்சிகம் ராசி: ஆகஸ்ட் மாத ராசி பலன்!

நங்கநல்லூர் பஞ்சநாதனின் விருச்சிகம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்… இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையப் போகிறது. ராசியில் ஞானக்காரகனான கேது பகவான் அமர்ந்திருக்கிறார். விநாயகப் பெருமானின் அனுக்கிரகம் பரிபூர்ணமாக நிறைந்திருக்கின்ற ஒரு காலகட்டம். உலகத்தை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொள் என்று சொன்ன போது தாய் தந்தை தான் உலகம் என்று அவர்களை சுற்றி வந்து அந்த ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார். எந்த விருச்சிக ராசிக்காரர்கள் தினந்தோறும் விநாயக் பெருமானை அருகம்புல் கொண்டு வழிபட்டு வருகிறார்களோ கண்டிப்பாக அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் 10ஆவது இடத்தில் தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார். அதனால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்ற வல்லமையை அந்த செவ்வாய் பகவான் தரப்போகிறார். சிம்மத்திலேயே அமர்ந்திருக்கக் கூடிய செவ்வாய் பகவான் அதிகார பதவியை உருவாக்கித் தருவார். காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு மிகச் சிறந்த உயர்வு ஏற்படும். சூரிய பகவான் உங்களது பாதக ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். 17ஆம் தேதி சூரிய பகவான் 10ஆவது வீட்டில் வந்து அமரப்போகிறார். இந்த காலகட்டம் ஒரு அதிகார பதவி கிடைக்கும்.

மேலும் படிக்க: விருச்சிக ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

3ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் வார்த்தையில் கவனம் தேவை. பொறுப்பும், பதவி உயர்வும் வரும் பொழுது வேண்டாம் என்று சொல்லி விடக் கூடாது. இளைஞர்களுக்கு அற்புதமான மாதம். புதன் பகவான் லாபத்தில் வந்து அமரப்போகிறார். வியாபாரிகளுக்கு மிகச்சிறப்பான மாதம். இந்த மாதம் முடிவதற்குள் மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தரும். மூடிக் கிடந்த தொழிற்சாலைகளை திறக்க முடியும். முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் இருந்த பிரச்சனை விலகும்.

பெண்களுக்கு அயல்நாட்டு தொடர்பான வேலை வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் உயர் பதவி தேடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதம். மூத்த குடிமக்களுக்கு வர வேண்டிய பென்ஷன், நிலுவைத் தொகை என்று அனைத்துமே வந்து சேரும். கலைஞர்களுக்கு இந்த மாதத்திற்குள் மிகச்சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் உப்பிலியப்பன். ஓம் உப்பிலியானே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் எல்லா வகையான நன்மைகளும் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.