விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்!

88

விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்….

திருவோணம் பண்டிகையை நல்வாழ்த்துக்கள்…

மேஷம்: புதிய வேலை வாய்ப்பு அமையும். வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் சிக்கல் உண்டாகும். உடல் நலனில் அக்கறை தேவை. பாதி நன்மைகள் மட்டுமே உண்டாகும்.

ரிஷபம்: தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். வேலை வாய்ப்பு அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நலனுக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்களால் நன்மை உண்டு.

மிதுனம்: எந்தவொரு காரியம் செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும். யாரையும் நம்பி பொருள் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடக் கூடாது. வியாபாரிகள், தங்களது வியாபாரத்திலும், உடல் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்: வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரம், கல்வி, குடும்பம் என்று அனைத்தும் சிறப்பாக அமையும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: நன்மைகள் உண்டாகும் நாள். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. வேறு வேலைக்கு மாற நினைப்பவர்கள் சொந்த ஜாதகத்தைப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். வியாபாரம் நன்றாக நடக்கும்.

கன்னி: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்க கூடிய நாள். திருவோண விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: எண்ணிய காரியங்கள் வெற்றியடையும் நாள். கல்வியில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகள் வெற்றி பெறும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை.

விருச்சிகம்: எங்கும், எதிலும் கூடுதல் வெற்றி உண்டாகும் நாள். அதிகார பதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டாகும்.

தனுசு: நீணட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் நாள். வாக்கு வாதம் வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகரம்: இனிய நாள். வயதானவர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு.

கும்பம்: நன்மைகள் அதிகளவில் நடைபெறும். உடல் நலனிலும், தேக ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: மாற்றங்கள் உருவாகக் கூடிய நாள். எண்ணிய காரியங்கள் வெற்றி பெறும் நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும் நாள். அலுவலகத்தில் இருக்கும் தொந்தரவுகள் நீங்கும் நாள்.