விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்!

22

விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்!

ஜூலை 02 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (02-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வெற்றிகரமான நாள். சுப செய்திகள் கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

ரிஷபம்: மன தைரியம் கூடும். ஆழ்மனது எண்ணங்கள் வெற்றிபெறும். யாரிடமும் கனிவாக பேச வேண்டும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். பொருளாதார வசதி பெருகும். புதிய வேலை கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் கோபம் கூடாது.

கடகம்: அபூர்வ வெற்றிகள் தேடி வரும் நாள். மாற்றங்களை சந்திக்க கூடிய ஒரு நாள். பரிசு மழைகள் கூடி வரும்.

சிம்மம்: இனிய நாள். பேச்சுத்திறமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வசதி வாய்ப்பு பெருகும். ஏராளமான நன்மைகள் நடக்கும்.

கன்னி: வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் நாள். வயதான பெண்மணிகளின் ஆதரவு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முதுகு தண்டுவட பிரச்சனை இருக்கும். இடுப்பு பகுதியில் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மகிழ்ச்சியான நாள். ஏராளமான நன்மைகள் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். சுபகாரிய செய்திகள் கூடி வரும். வெளிநாட்டு தொடர்பு விரிவடையும்.

விருச்சிகம்: மிக மிக நல்ல நாள். நீங்கள் சந்திப்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு. அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: மகிழ்ச்சிக்குரிய நாள். தாயாரது உடல் நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும்.

மகரம்: இனிய நாள். உடல் நலனில் அக்கறை தேவை புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பிரிந்தவர்கள் மீண்டும் இணைவீர்கள்.

கும்பம்: உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. வேலைமாற்றம் எண்ணம் மேலோங்கும். நல்ல செய்திகள் தேடி வரும். சந்தோஷ்மான அனுபவங்கள் பெருகும்.

மீனம்: அதிர்ஷ்டகரமான நாள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு. நல்ல நல்ல பதவிகள் உண்டு. தெய்வ வழிபாடு வெற்றி தரும்.