வீடு கட்டும் யோகம் உண்டு: கன்னி டிசம்பர் மாத ராசி பலன்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் டிசம்பர் மாத ராசி பலன்கள் 2021….
கன்னி ராசிக்கான டிசம்பர் மாத ராசி பலன்:
எதிர்பார்ப்புகள் நிறைந்த நல்லதொரு மாதமாக இந்த மாதம் அமைகிறது. பிறரது உதவியினால் முன்னேறக் கூடிய வாய்ப்புகளும் கூடி வரும். புதிதாக பிளாட் வாங்கும் தேடி வரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி நிலை சீராகும். பெருமாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: கன்னி ராசி – ஆங்கில மாத ராசி பலன் 2021 வீடியோ தொகுப்பு!
போக்குவரத்து துறை, கம்பியூட்டர் துறை, ஊடகத்துறை, வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள் என்று அனைவருக்கும் புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். மன தைரியத்துடன் எதையும் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். பற்கள் தொடர்பாகவும், வயிறு தொடர்பாகவும் பிரச்சனைகள் வரலாம். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். வேலை மாற்றமும் உருவாகும். வெளிநாட்டு வாய்ப்புகளும் தேடி வரும். வெளிநாட்டில் படிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வரும். உடல் நலனில் பாதுகாப்பு தேவை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று வர வெற்றிகள் தேடி வரும்.
மாடி வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் மேலோங்கும். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்க்கும் துறைகளில் வேலை கிடைக்கும். கார், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு. சரியான வாழ்க்கைதுணையை தேர்வு செய்ய வேண்டும்.
அலுவலகத்திலிருந்து நிலுவைப் பணம் கைக்கு வந்து சேரும். சுய பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.