வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்!

27

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்!

மே 19 ஆம் தேதியான இன்றைய (19-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பாராட்டு மழையில் நனைவீர்கள். விநாயகப் பெருமானின் வழிபாட்டின் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. வங்கி கடன் கட்ட வேண்டிய சூழல் உண்டாகும். முதலீடு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்: நன்மைகள் உண்டு. மாற்றங்கள் உண்டாகும். கலகலப்பான சூழ்நிலை இருக்கும். யாரையும் விமர்சனம் செய்து பேசக் கூடாது. வியாபாரத்தில் முன்னேற்றமான நாள். தொலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.

மிதுனம்: அற்புதமான நாள். வருமானம் கூடும். பேச்சினால் தொழில் நடத்துபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு எண்ணங்கள் பெருகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் தொட்டதெல்லாம் வெற்றி பெறும்.

கடகம்: வெற்றி மீது வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவார்கள். உயர் பதவி, உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: அதி அற்புதமான நாள். அரசு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உயர்வான நாள். வியாபாரிகளுக்கு வியாபார முயற்சி வெற்றி பெறும்.

கன்னி: மிகச்சிறந்த நாள். உயர்ந்த வெற்றியை பெறும் நாள். திருமண பந்தம் கூடி வரும் நாள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வாகன பயணம் உண்டு. உள்ளூர் வியாபாரம் சிறப்பாக அமையும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிகச் சிறந்த நல்ல நாள். ஏராளமான நன்மைகள் உண்டாகும். திருமண பந்தம் கூடி வரும். கழுத்துப் பகுதி பிரச்சனை வரலாம். கால் வலியும் ஏற்படும். நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: உங்களது சுதந்திர உணர்வுகளை இழக்க மாட்டீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் உண்டாகும். வெற்றிகள் தரும் நல்ல நாள்.

தனுசு: அருமையான நாள். தாயின் மீது பாசம் அதிகரிக்கும். தாய்மை உணர்வு அதிகரிக்கும். அன்பு காட்டுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையான உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

மகரம்: இனிய நாள். அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றிகள் உண்டாகும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்வீர்கள். வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.

கும்பம்: இனிய நாள். தொட்ட் து துலங்கும் அற்புதமான நாள். புரமோஷனுக்கு முயற்சிக்கலாம். உடல் நலத்திற்கு மருத்துவர் ஆலோசனை எடுக்கலாம். அழகு மீது ஆர்வம் உண்டாகும்.

மீனம்: அருமையான நாள். மகிழ்ச்சிக்குரிய நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். ஆன்லைன் கோர்ஸில் சேருவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.