வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்!

25

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்!

நவம்பர் 24 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (24-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: சகோதரனால் சொத்து பிரச்சனை வரலாம். பழைய சொத்துக்களை விற்க ஏற்ற நாள். முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பிஸினஸில் அளவான முதலீடு தேவை. படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்: கல்யாண விசயம் கூடி வரும். சுபகாரிய செய்தி வரும். விருந்து, விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். அருமையான நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியான நாள்.

மிதுனம்: உடல் நலனில் அக்கறை தேவை. தந்திரமாக யோசிப்பீர்கள். அறிவின் துணை கொண்டு பிஸினஸ் செய்வீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டு. நட்புக்களினால் நன்மை உண்டு.

கடகம்: அருமையான நாள். கல்யாண விசயங்கள் கூடி வரும். காதல் விசயங்கள் கூடி வரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்: புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டு. வருமானம் பெருகும். தந்தை, தாய் வழி உறவுகளால் நன்மை உண்டு. சகோதரர்களால் நன்மைகள் உண்டு.

கன்னி: அரசியலில் வெற்றி பெறுவீர்கள். காதல் கை கூடும். அனுகூலமான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். நண்பரிடம் உதவி கேட்டு சென்றால் வெற்றி கிடைக்கும்.

துலாம்: கலாச்சாரத்தின் மீது ஆர்வம் வெளிப்படும். நன்மைகள் கூடி வரும். இன்பங்கள் கூடி வரும். சகல காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: மென்மேலும் வெற்றிகள் குவியும் ஒரு நாள். எதிரிகள் தொந்தரவு இருக்கும். உயிர் பாதுகாப்பில் அக்கறை தேவை. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

தனுசு: புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உறவுகளினால் நன்மை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீடு கட்டும் யோகம் உண்டு.

மகரம்: உடல் நலனில் அக்கறை தேவை. அரசாங்கம் தொடர்பாக விருதுகள், பட்டங்கள் கிடைக்கும். புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்: மதுரை மீனாட்சியை வழிபட வேண்டும். பிள்ளைகள் முன்னேற்றம் இருக்கும். வேலை கிடைக்கும். கல்வி நலன் பெருகும் நல்ல நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: நல்ல நல்ல செய்திகள் வரும். அரசுத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சுபகாரிய செய்தி கூடி வரும்.