வீண் பழி உண்டாக கூடும்!

39

வீண் பழி உண்டாக கூடும்!

அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியான இன்றைய (11-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 11 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்களை தாங்கி வருவீர்கள். வேல் துணை இருந்தால் எல்லாவற்றிலும் உயர்வு உண்டு. தன லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு அமையும்.

கும்பம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். இனிய நாள். தேவைகள் பூர்த்தியாகும். மனக்கஷ்டங்கள் நீங்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

மகரம்: இனிய நாள். ஏராளமான நன்மைகள் நடைபெறும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். நெருங்கியவருடன் மனஸ்தாபங்கள் வரும். உயர் பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு: நன்மையான ஒரு நாள். லாபமான ஒரு நாள். குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன லாபம் உண்டு. வாய்வு தொந்தரவு இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: மிகச்சிறந்த மேன்மைகள் புரிவீர்கள். புகழ் பெருகும். செய் தொழில் விருத்தி உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு. சூதாட்டத்தில் கவனம் வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்திவிட வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. தன லாபம் உண்டு. உடலில் விலா பகுதியில் சிக்கல்கள் வரலாம்.

துலாம்: முக்கியமான காரியத்தை பொருள் செலவு செய்து முடிக்க நினைப்பீர்கள். கலைத்துறையினருக்கு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். புதிய வாய்ப்புகள் திடீரென்று வரும். அடிவயிறு வலி ஏற்பட்டு நீங்கும். செலவினங்கள் அதிகமாகும். கல்வி நலன் அதிகரிக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வீண் பழி உண்டாக வாய்ப்பு இருக்கிறது. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். மூத்த பெண்மணியின் ஆலோசனை வாழ்க்கையை உயர்த்தும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும்.

சிம்மம்: உள்ளத்தின் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தன லாபம் உண்டு. முதுகு தண்டுவட வலி ஏற்படலாம். அங்காளபரமேஸ்வரி வழிபாடு எல்லையில்லா ஆனந்தம் தரும்.

கடகம்: மகிழ்ச்சி தரும் ஒரு நாள். குடும்பத்தில், அலுவலகத்தில் என்று அனைத்து இடங்களிலும் ஒத்துழைப்பு கிடைக்கும். தன வரவு உண்டு. வியாபாரிகளுக்கு இருந்த பிரச்சனைகள் மறையும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். மிகச்சிறந்த வெற்றிகள் கிடைக்கும். பெருமாள் வழிபாடு வெற்றி கொடுக்கும். வியாபாரிகளுக்கு உகந்த நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. நல்ல வேலை வாய்ப்பு அமையும். பிறரை குறை சொல்லாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்: வாழ்க்கையில் முன்னேற்றமான காலகட்டம். அரசு வழி ஒப்பந்தங்கள் கிடைக்கும். மதிப்புமிக்க பதவிகள் தேடி வரும். தன லாபம் உண்டு. செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக அமையும்.

மேஷம்: எதிரிகள் விஷயத்தில் கவனம் வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. நல்ல வேலை வாய்ப்பு அமையும். தன லாபம் உண்டு.