வெற்றிகள் பெருக கூடிய நாள், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்!

20

வெற்றிகள் பெருக கூடிய நாள், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்!

ஜூலை 04 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (04-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வாழ்க்கை ஓட்டம் அதிகமாக இருக்கும். எதையோ சாதிக்க வேண்டும் என்று இருப்பீர்கள். பிஸினஸ் முயற்சிகள் வெற்றி பெறும். இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். எலும்பு மருத்துவர்களுக்கு நல்ல நாளாக இந்த நாள் இருக்கும்.

ரிஷபம்: உள்ளுக்குள் நெருக்கடி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். லாபம் இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

மிதுனம்: வெற்றி மீது வெற்றி வரும். பண லாபம் உண்டு. குடும்ப லாபமும் உண்டு. மூத்த சகோதரர்களின் உடல் நலனில் கவனம் வேண்டும். சமூக வலைதளங்களை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு நெருக்கடி உண்டு.

கடகம்: இந்த நாள் இனிமையான நாள். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாகனங்களை பழுதுநீக்கி பயன்படுத்த வேண்டும்.

சிம்மம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நெருக்கடி இருக்கும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சி வெற்றி பெறும். வியாபாரத்தில்  தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: இந்த நாள் நல்ல நாள். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. கெட்டவர்களை விரட்டியடிக்கும் நாள். வாழ்க்கையை புரிய வைக்கும் நேரம் இது. விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். நிறைய மாற்றங்கள் உண்டு. வியாபாரம் அபாரமாக இருக்கும். மிக உயர்ந்த நகைகள், அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அருமையான நாள். ராசி மிகச்சிறந்த நாள். தொட்டது துலங்கும் நாள். உயர்கல்வி முயற்சி வெற்றி பெறும். மருத்துவ மாணவர்கள் புகழ் பெறுவார்கள். வெளிநாட்டு தொடர்பு விரிவடையும். பதவி உயர்வு கிடைக்க கூடிய நாள்.

விருச்சிகம்: நல்ல வேலை கிடைக்கும். குழப்பங்கள் அதிகமாக இருக்கும். தெளிவான முடிவு எடுக்க வேண்டும். அலுவலக விஷயங்களில் பணிவு வேண்டும். உண்மையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.

தனுசு: மென்மேலும் வெற்றிகள் பெருக கூடிய நாள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வியாபார தொடர்புகள் விரிவடையும். பொறாமை பார்வை அதிகமாக இருக்கும். குடும்பத்தார் உடல் நலனில் அக்கறை தேவை. மின் சாதனங்களில் கவனம் தேவை.

மகரம்: சந்திராஷ்டம நாள். மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு உதவிகள் கிடைக்கும். காதலை, அன்பை வெளிப்படுத்தக் கூடிய நாள்.

கும்பம்: இந்த நாள் நல்ல நாள். சிறுதூர பயணங்களில் அக்கறை தேவை. கவலை தீரும்.

மீனம்: வெற்றிகரமான நாள். தேவையான கடனுதவி கிடைக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். தன வரவு அதிகமாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.