வெளிநாட்டுக்கு செல்வீர்கள்: மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

127

வெளிநாட்டுக்கு செல்வீர்கள்: மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் மீனம் ராசி – வீடியோ தொகுப்பு!

மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய கிரகம் எது என்று கேட்டால் அது குரு பகவான். அதிபதியே இந்த குரு பகவான் தான். ஆகவே தனது ராசிக்கு குரு பகவான் நிறைய நன்மைகளை தருவார். மீன ராசிக்காரர்களுக்கு இது வரை 11 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது 12 ஆம் இடத்திற்கு வருகிறார். பொதுவான அந்த 12 ஆம் இடம் அயன, சயன, சுப ஸ்தானத்தை குறிக்கக் கூடியது. முதலீட்டை குறிக்கும். இதனால், வரையில் கனவு தொல்லை இருந்திருக்கும். https://www.youtube.com/watch?v=onWdy6m_r-k

தூக்கம் தொடர்பான பிரச்சனை இருந்தவர்கள் இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான உறக்கம் வரும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிம்மதியை தரக்கூடிய ஒரு காலம். பொருளாதாரத்தை விருத்தி செய்யக் கூடிய முதலீட்டில் நீங்கள் இறங்குவீர்கள். வெளிநாட்டு வாய்ப்பு உருவாகும். கனடா, ஸ்வீடன், நெதர்லாந்து, அமெரிக்கா என்று கனவுகளுடன் வாழும் இளைஞர்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம்.

நிறைய செலவுகள் இருக்கும். அதனை நீங்கள் சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். வீண் விரையம் ஏற்படக் கூடாது. தான, தர்மங்கள் செய்யலாம். சொத்து, சுகம் வாங்கலாம். குரு பகவானுக்கு 5, 7 மற்றும் 9 ஆகிய 3 பார்வைகள் உண்டு. மீன ராசிக்காரர்களுக்கு 5ஆம் பார்வையாக வீடு வாங்கும் யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அருமையான வீடு, வாசல் அமையப் போகிறது. கல்வி ரீதியில் என்னென்ன தடைகள் இருந்ததோ இனி அதெல்லாம் மாறப் போகிறது. https://www.youtube.com/watch?v=onWdy6m_r-k

இந்த குரு பகவான் உங்களது 6ஆவது ஸ்தானத்தை பார்க்கிறார். இதன் மூலம் நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாதிகள் குணமாகும். எதிரிகள் உங்களிடம் வந்து அடிபணிவார்கள். பெண்களுக்கு இருக்கும் ஹார்போன் பிரச்சனை, மாதவிடாய் கோளாறுகள், பிடுப்பு வலி பிரச்சனை, ஆண்களுக்கு முதுகு வலி பிரச்சனை என்று எல்லாமே சரியாகும். புதிய் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனை சரியாகி நிம்மதி உண்டாகும். இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். https://www.youtube.com/watch?v=onWdy6m_r-k