வெளியூர், வெளிநாடு சென்றால் பஞ்சாயத்து: விருச்சிக ராசி ஆவணி மாத பலன்!

59

வெளியூர், வெளிநாடு சென்றால் பஞ்சாயத்து: விருச்சிக ராசி ஆவணி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் விருச்சிகம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

வேலை இல்லாதவர்களுக்கும், வேலை இழந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து சந்தோஷமாக இருக்கும் ஒரு மாதம். வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேன்மையான ஒரு மாதம். தொழில் சரியில்லை என்றால் கூட வேறு தொழில் செய்வதற்கான நல்ல மாதம்.

அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் மாதம். தந்தைக்கு நல்லது நடக்கும் மாதம். அதன் மூலமாக சமூகத்தில் அவரது அந்தஸ்து உயரும். பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு அற்புதம் நிறைந்த மாதம். அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும் நிலை. மூத்த சகோதரர்கள் இருந்தால் அவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்களிடம் இருக்கும் காசு, பணம் மூலமாக வண்டி, வாகனம், வீடு, மனை என்று ஏதாவது வாங்க வேண்டும் என்ற அமைப்பு உள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யும் நிலை வரும். பிள்ளைகளால் சில கருத்து வேறுபாடுகள் வரும். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு ஆதாயம், ஆதரவு கிடைக்கும். வேறு மொழி பேசும் நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் துலாம் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். வராக் கடன் கைக்கு வந்து சேரும். இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும்.

வெளியூர், வெளிநாடு பயணங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆடை, ஆபரணங்கள், தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டு. பட்டங்கள், பதவிகள் கிடைக்க கூடிய ஒரு மாதம். சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் விருச்சிக ராசி அன்பர்களுக்கு திருப்பு முனை நிறைந்த மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.