வேல் அபிஷேகம் செய்ய வேண்டும்; பிரிந்தவர்கள் மீண்டும் வருவார்கள்!

29

வேல் அபிஷேகம் செய்ய வேண்டும்; பிரிந்தவர்கள் மீண்டும் வருவார்கள்!

செப்டம்பர் 23 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (23-09-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். வில்வ இலை கொண்டு ஓம் திருமகளே போற்றி என்று 108 முறை சொல்லி மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். திருமணத் தடை நீங்கும். கல்வியில் அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கூடும்.

ரிஷபம்: மகத்துவமான நாள். எதிரிகளை வெல்லக் கூடிய நாள். கைகளில் காப்பர் வளையம் போட்டுக் கொள்ள வேண்டும். எலும்பு பிரச்சனை சரியாகும். முருகப் பெருமானை வழிபட வேண்டும். ஒரு மாற்றத்தை காண வேண்டிய நாள். கல்வி தடை விலகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: தைரியமான ஒரு நாள். நம்பிக்கை அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு வெற்றி தரும். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வளர்ப்பில் அதீத ஆர்வம் இருக்கும்.

கடகம்: பூமி யோகம் இருக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. வில்லங்க விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு தொடர்பான பிரச்சனை இருக்கும். பேச்சில் கவர்ச்சி, வசியம் இருக்கும். கல்யாண விஷயங்கள் கூடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.

சிம்மம்: புதிதாக கார் வாங்கும் யோகம் உண்டாகும். வாகன யோகம் உண்டு. அக்கவுண்ட்ஸ் படித்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. எலும்பு தேய்மானம் தெரியும். வெற்றிலை, பாக்கு போட்டால் எலும்பு தேய்மான பிரச்சனை சரியாகும்.

கன்னி: அருமையான நாள். வாக்கு பலம் பெறும். நிறைய மாற்றங்கள் உண்டு. செல்வ வரத்து அதிகரிக்கும். தற்பெருமை பேசக் கூடிய நாள். பொருளாதார நிலை உயரும். பிஸினஸில் அளவான முதலீடு வெற்றி தரும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பிரிந்து செல்வதும், மீண்டும் வந்து சேருவதும் இருக்கும். வெற்றிகள் நிறைந்த நாள். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சிக்கல் தீரும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: நல்ல வேலை கிடைக்கும் ஒரு நாள். முருகப் பெருமானின் அனுக்கிரகம் உண்டு. மன தைரியம் பெருகும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். முருகனுக்கு வேல் அபிஷேகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேல் மாறல் ஸ்லோகம் சொல்ல வேண்டும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.

தனுசு: அற்புதமான காலகட்டம். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் அனுகூலமாக இருப்பார்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள்.

மகரம்: அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் அமைதியாக இருக்க வேண்டும். பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை.

கும்பம்: பெண் தொழில் முனைவோர் ஏற்றம் பெறுவார்கள். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ள கூடாது. தன வருமானம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு.

மீனம்: எதிரிகளை வெல்லக் கூடிய ஒரு நாள். அறிவாற்றலால் ஜெயிப்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிஸினஸ்க்கு தேவையான கடனுதவி கிடைக்கும்.