ஹார்மோன் பிரச்சனை வரும்!

80

ஹார்மோன் பிரச்சனை வரும்!

அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியான இன்றைய (04-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 04 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் அக்கறை வேண்டும். பிறரது அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது. தான, தர்மங்கள் செய்வதால் நன்மைகள் உண்டாகும். பதவியில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் உருவாகும்.

கும்பம்: நன்மைகள் அதிகம் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். கண் தொடர்பான பிரச்சனை வரும். தன லாபம் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. வியாபாரம் மேன்மையடையும்.

மகரம்: எண்ணங்கள் பூர்த்தியாக பொறுமை அவசியம். தன லாபம் உண்டு. வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

தனுசு: எல்லா ஆசியும் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். தோள்பட்டை வலிகள் ஏற்படும். தன லாபம் உண்டு. சுப விஷயங்கள் கூடி வரும். எதிர்பார்க்கும் அனுகூல செய்திகள் உண்டு.

விருச்சிகம்: நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி, நிம்மதி தரும். அதிர்ஷ்கரமான நாள்.

துலாம்: கனவு மெய்ப்படும் அற்புதமான நாள். சாதனை புரிவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தெய்வீக எண்ணங்கள் பெருகும். வியாபாரத்தில் நல்ல சூழல் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனை இருக்கும். தன லாபம் உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எலக்ட்ரானிக் பொருட்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

சிம்மம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். அதே நேரத்தில் பதற்றமும் இருந்து கொண்டே இருக்கும். பிரதோஷ வழிபாடு நன்மையளிக்கும். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடகம்: இனிய நாள். தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். தன லாபம் உண்டு. குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்சனை தீர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனுசரித்து செல்ல வேண்டும். எதையும் பெரிதாக்க கூடாது. எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு. தன வரவு உண்டாகும்.

மிதுனம்: சந்தோஷமான அனுபவங்கள், சந்தோஷமான செய்திகள் தேடி வரும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் அமையும்.

ரிஷபம்: இனிய நாள். நல்லதொரு நாள். மனதில் விரும்பிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் முதலீடுக்கு பங்கம் வராது, ஒரு நல்ல நாள். கால் பகுதியில் பிரச்சனை இருக்கும். ஹார்மோன் பிரச்சனை வரும். கவனமாக இருக்க வேண்டும்.

மேஷம்: தாய்வழி உறவினர்களால் அதிர்ஷ்டம் வரும். சிலருக்கு தாய்வழி சொத்துக்கள் வந்து சேரும். அம்மாவின் ஆலோசனைக் கேட்டால் அதிர்ஷ்டம் வரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் நன்றாக இருக்கும்.