ஹெச் ஆர் துறையில் வேலை கிடைக்கும்!

42
இன்றைய ராசிபலன்

ஹெச் ஆர் துறையில் வேலை கிடைக்கும்!

நவம்பர் 11 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (11-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: சௌபாக்கியமான நாள். இன்று உங்களது பேச்சு நல்ல பேச்சாக இருக்கும். நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கும். காரிய வெற்றி உண்டு. தன வருமானம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு.

ரிஷபம்: மிக அருமையான நாள். கல்யாணம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடக்கும். பிரிவுகள் உறவுகளின் அவசியத்தை உணர்த்தும். குடும்பத்தில் வலிமை சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்: மிக அருமையான நாள். வாழ்க்கையில் லாபம் உண்டு. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள கூடாது.

கடகம்: பாராட்டுதலுக்குரிய நாள். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். மனமகிழ்ச்சியான சூழல் தென்படும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. குல தெய்வத்தின் அருளாசி உண்டு.

சிம்மம்: முருகனை வழிபட வேண்டும். வாழ்க்கை உயர்வாக இருக்கும். வாழ்க்கை சிக்கல் தீரும். பிஸினஸ் குறித்து நல்ல செய்தி வரும். உடல் நலனில் அக்கறை தேவை. அலுவலகத்தில் பொறுமையான செயல்பாடு வெற்றியை குவிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை.

கன்னி: நிலையான வேலை கிடைக்கும். அரசு, அதிகார பதவிகள் கிடைக்கும். சிறு பூச்சிகளினால் தொந்தரவு வரலாம். கிருமிகள் பரவும் காலம் இது. மனதிற்கு நிம்மதி உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

துலாம்: மாலையில் நன்மை உண்டாகும். யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது. காவல் துறையினரால் தண்டனை உண்டாகும். சந்திராஷ்டம்ம் என்பதால், யாரையும் மனம் நோகும்படி பேச கூடாது.

விருச்சிகம்: நல்ல ஆற்றல் உண்டு. நேர்மையாக வாழ வேண்டும். கொள்கைப்பிடிப்போடு வாழ வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்து தானம் செய்ய வேண்டும். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. குல தெய்வத்தின் கடாட்சம் உண்டு.

தனுசு: மிக அருமையான நாள். வாழ்க்கையில் வெற்றிகள் குவிந்த நாள். நல்ல நல்ல இலக்கியங்களை படிப்பீர்கள். முருகப் பெருமான் வழிபாடு செய்ய வேண்டும். பிஸினஸ் முன்னேற்றம் உண்டு. ஹெச் ஆர் துறையில் வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அசத்தலான வெற்றிகள் நிறைந்த நாள்.

மகரம்: வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. கடன் கிடைக்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். உடல் நலனில் அக்கறை தேவை. நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு கூடாது.

கும்பம்: மிக அருமையான நாள். பல நன்மைகள் நிறைந்த நாள். கந்தர் அனுபூதி ஸ்லோகம் படிக்க வேண்டும். பிஸினஸ் வளர்ச்சி உண்டு. தன லாபம் உண்டு. எதிர்மறையான வார்த்தைகளை பேசக் கூடாது.

மீனம்: தன லாபம் நிறைந்த நாள். வருமானம் கூடும். வீடுகளை வாடகைக்குவிட்டு அதன் மூலம் லாபம் வரும். பேச்சினால் வருமானம் வரும். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.