ஆகஸ்ட் மாதம் இந்த ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம்!

85

தனுசு ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் தனுசு ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்…பிறருக்கு உதவும் நல்ல மனம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே! எந்த ஒரு விஷயம் எடுத்துக்கொண்டாலும் அதில் லட்சியம் வைத்துக் கொண்டு பயணம் செய்யக்கூடிய அற்புதமான மனிதர்கள். தனுசு ராசிக்காரர்களே நண்பர்களாக வைத்துக் கொண்டவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால், தனுசு ராசியே ஒரு பாக்கிய ராசி. இந்த பாக்கிய ராசியிலேயே பிறப்பதிலேயே ஒரு யோகம் தான்.

தனுசு ராசி குரு பகவானின் ராசி. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதிலும், நல்வழிப்படுத்துவதிலும் இந்த ராசி முதன்மை ராசியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றமான மாதமாக இருக்கும். உயர்வுகளை காணப்போகிறார்கள். ராசிநாதன் குரு பகவான் 3ஆம் இடத்தில் வக்கிரமாக இருக்கிறார். மேலோட்ட த்தில் தைரியமானவர்களாக இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் அடிமனதில் பயத்துடனேயே இருப்பார்கள்.

மேலும் தெரிந்து கொள்ள: ஆகஸ்ட் மாத ராசி பலன் தனுசு – வீடியோ!

மாற்றங்கள் நிகழும். ப்ரீ கேஜி, எல்கேஜி யுகேஜி, சங்கீதம், கராத்தே, சிலம்பம் என்று உங்களுக்கு இதுவரை பாடம் நடத்திய குருமார்களே நினைத்து வழிபட வேண்டும். பொருளாதார தேவை நிறைவேறும். புதன் பகவான் 8ல் இருப்பதால், வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். புதிய வியாபாரம் தொடங்குவதிலும் தடை ஏற்படும். முதலீடு செய்வதென்றாலும் ஒரு தடை ஏற்படும்.

ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி புதன் பகவான் 8 லிருந்து 9ஆவது இடத்திற்கு வரும் பொழுது அவரை குரு பகவான் பார்வையிடுவார். இதனால், வியாபாரத்தில் மிகச்சிறந்த ஏற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். 17ஆம் தேதி சூரிய பகவான் பாக்கியஸ்தானத்தில் ஆட்சி நிலை பெறுகிறார். அன்று முதல் தர்ம கர்மாதிபதி யோகம் நடக்க இருக்கிறது.

மாணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களைப் பொறுத்தவரையில் சுக்கிர பகவான் தற்போது ராசிக்கு 9ஆவது இடத்தில் இருக்கிறார். ஆதலால், உயர் பதவிகள் தேடி வரும். மனதில் கஷ்டங்கள் இருந்தாலும், அதனை தீர்ப்பதற்கு குரு பார்வை கிடைக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிர பகவான் 10ஆவது இடத்தில் நீச்சம் பெறும் போது அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். இளைஞர்களுக்கு 24 ஆம் தேதிக்குப் பிறகு மிகச் சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அதோடு, ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு யோகம் உண்டாகும்.

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமி வழிபாடு எண்ணிய எண்ணங்களை ஈட்டித் தரும். இந்த மாதம் மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் மூகாம்பிகையே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். எல்லா வெற்றியும் தேடி வரும்.