12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

36

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்….

12 ராசிகளுக்கான ராசி பலன்கள்…

ஒவ்வொரு ராசிக்கான பலன்கள் என்ன என்பதை மீனம் ராசியிலிருந்து நாம் பார்ப்போம்…

மீனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. அதற்கான கடனுதவியும் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: இந்த நாள் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் நாள். வியாபாரத்திற்கு தேவையான கடனுதவி கிடக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன்கள் – வீடியோ தொகுப்பு!

மகரம்: சிறுதூர பயணங்கள் இருக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். எழுத்தாளர்கள் புகழ் பெறுவார்கள்.

தனுசு: இந்த நாள் எல்லா வகையிலும் இனிய நாளாக அமையும். குடும்ப முன்னேற்றத்திற்கு சிறப்பான நாள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் இருக்கும். பிள்ளைகளின் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த நாள் மிகச்சிறந்த நாளாக அமைகிறது.

விருச்சிகம்: பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருடனும் வாக்கு வாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தாயாரின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்: இன்று மிகச்சிறந்த நாள். தெய்வ அனுகூலம் பரிபூர்ணமாக கிடைக்கக் கூடிய நாள். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

கன்னி: நல்ல வேலை கிடைக்கக் கூடிய நாள். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வேலை செய்யும் இடத்தில் விரும்பிய இடமாற்றம் அமைய வாய்ப்பிருக்கிறது.

சிம்மம்: மிகச்சிறந்த அனுகூலமான நாள். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தில், வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும் நாள்.

கடகம்: வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் பல மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மிதுனம்: மன தைரியம் அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் – மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்கும்.

ரிஷபம்: தன லாபம், மன மகிழ்ச்சி, குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிதாக பிளாட் வாங்கும் எண்ணம் தோன்றும். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும்.

மேஷம்: மன தைரியம் அதிகரிக்கும். குழப்பங்கள் விலகும். நிம்மதி கிடைக்கும். வியாபாரம் பெருகும். குடும்ப வாழ்க்கை அனுகூலமாக அமையும்.