12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

67

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 3 ஆம் தேதி 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: ஒரு சுகமான நாள். சந்தோஷ அனுபவங்கள் கிடைக்கக் கூடிய நாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். யாரையும் நம்பாதீர்கள்…

ரிஷபம்: பல்வேறு எண்ணங்கள் தோன்றும். எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். கலையுலக வாழ்க்கை பிரகாசிக்கும்.

மேலும் முழுவதும் தெரிந்து கொள்ள: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் இன்றைய ராசி பலன் வீடியோ தொகுப்பு!

மிதுனம்: சிறப்பான நாள். நிறைய விரையங்கள் இருக்கும். மாற்றங்கள் உண்டாகும். நல்ல செலவுகள் வரும். பேச்சில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: பூவைவிட மென்மையான மனசு கொண்ட கடகம் ராசி அன்பர்களே. மனமகிழ்ச்சியோடு நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றி தரும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை பலப்படும். வீடு, வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்: இதமான உறவுகளும், மகிழ்வான பண வரவுகளும் வர வேண்டிய ஒரு நாள். வேலைமாற்றம் ஏற்படும். புதிய வேலை தேடிச் செல்வீர்கள்.

கன்னி: இந்த நாள் சிறந்த நாள். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். முன்னோர்கள் ஆசி, புண்ணியத்தினால் நீங்கள் வாழ்க்கையில் உயர்வீர்கள். வாழ்க்கை சிறக்கக் கூடிய நல்ல நாள்.

துலாம்: சிவபெருமானை வழிபட வேண்டும். தாயாரின் உடல்நலனின் அக்கறை தேவை. எதையும் யோசித்து பேச வேண்டும்.

விருச்சிகம்: இந்த நாள் உங்களது வாழ்க்கையில் முன்னேற்றகரமான நாள். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். தாயாரின் ஆசி எப்போதும் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும்.

தனுசு: நல்ல வேலை கிடைக்கும் நாள். ஆனால், பழைய வேலையில் பிரச்சனை வேண்டாம். எதையும் நன்கு யோசித்து, சிந்தித்து செயல்பட வேண்டும்.