12 ராசிகளுக்கான 02.08.21ஆம் தேதிக்கான ராசி பலன்!

50

12 ராசிகளுக்கான 02.08.21 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 02 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்…

மீனம்:

இந்த நாள் உங்களின் எழுத்து, பேச்சு, குடும்ப வாழ்க்கை என்று அனைத்துமே மிகச்சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தால் லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றகரமான நாள். அனைத்திலும் வெற்றி கிட்டும் நாள்.

கும்பம்:

நிறைய நன்மைகள் நடக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கணவன் வழி உறவினர்களால் அதிக நன்மைகள் உண்டாகும். வாழ்க்கை துணைவருக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

முழுவதும் படிக்க: 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 02 ஆம் தேதி இன்றைய ராசி பலன்!

மகரம்:

கல்வி மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சியில் அதிக கவனம் இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மனைவியின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. கம்பியூட்டர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மாற்றம் வரும்.

தனுசு:

ரொம்ப நல்ல நாள். வேலை வாய்ப்பு முயற்சியை பிற்பகலுக்கு மேல் செய்தால் வெற்றி கிடைக்கும். பிஸினஸ் பண்ணும் முயற்சிகள் எல்லாவற்றையும் காலையில் செய்யலாம். இன்று ஆடி கிருத்திகை. அம்மன் வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். முருகனை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள் இன்றைக்கு வழிபாடு செய்து பாருங்கள், உங்களது வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயரும். பணம், கொடுக்கல், வாங்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.