12 ராசிகளுக்கான 04.08.21ஆம் தேதிக்கான ராசி பலன்!

33

12 ராசிகளுக்கான 04.08.21ஆம் தேதிக்கான ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 4 ஆம் தேதி இன்றைய ராசி பலன்…

கடைசி ராசியிலிருந்து பார்ப்போம்…

மீனம்: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியப்போகும் நல்ல நாள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுத்த முடிவுகள் வெற்றிபெறும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் விலகும். நண்பர்களுக்கிடையே இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

கும்பம்: இந்த நாள் இனிய நாளாக அமைகிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். புதிதாக வீடு, மனை வாங்க வாய்ப்புகள் உருவாகும் நாள். வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும் நாள். மாணவர்களுக்கு படிப்பில் போட்டிகள் உருவாகும்.

மகரம்: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியப்போகும் நல்ல நாள். காலையில் மகிழ்ச்சி. மாலையில் நல்ல வேலை வாய்ப்பு அமையும். நீண்ட நாட்களாக உடலில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் – வீடியோ தொகுப்பு!

தனுசு: உங்களது வாழ்க்கையில் மன தைரியம் அதிகரிக்கக் கூடிய நாள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள். எதிரிகளின் தொந்தரவும் கொஞ்சம் இருக்கும் நாள். வியாபாரத்தில் போட்டி, பந்தயங்களை சமாளிக்க வேண்டிய நாள். மாணவர்கள் படிப்பில் இன்னும் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

விருச்சிகம்: இந்த நாள் ஏராளமான நன்மைகளை தரும். மாலையில் மௌனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். மாணவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமையும்.

துலாம்: முன்னேற்றமான நாள். காலையில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாலையில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி வரும். தந்தை வழியில் உறவினர்கள் அவர்களது உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். வியாபாரிகளுக்கு நிலையான வியாபாரம் பற்றி யோசிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வித்திறன் அதிகரிக்கும்.

கன்னி: ஏராளமான நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாள். மன மகிழ்ச்சி, வெற்றி, குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம், வியாபாரத்தில் வளர்ச்சி, கல்வியில் உங்களது தரத்தை உயர்த்தக் கூடிய நல்ல சூழல் அமையும்.

சிம்மம்: ஒரு நல்ல நாளாக, வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் நாளாக இன்றைய நாள் அமையப் போகிறது. சொத்து, சுகம் தொடர்பாக நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல வேலை கிடைக்கும். புதிய வியாபாரம் ஆரம்பிக்கும் சிந்தனை தோன்றும். கல்வியில் மாற்று கல்வி பற்றிய சிந்தனை தோன்றி வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கும்.

கடகம்: திட்டமிட்ட வியாபாரம் இன்றைக்கு வெற்றியைத் தரும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் மனக்குமுறலுக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு குடும்பத்தில் வர வேண்டிய நல்ல வருமானம் வரும். மன நிம்மதி இருக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு.

மிதுனம்: தன லாபம் அதிகரிக்கும். காலையில் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். பேச்சில் நலினம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காணும் நாள்.

ரிஷபம்: இந்த நாள் அதிர்ஷ்டகரமான நாள். திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்ப நிம்மதி கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள் என்று திட்டம் தீட்டுவீர்கள். பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் உள்நாட்டு தேக்க நிலை மாறும்.

மேஷம்: செய்கின்ற முயற்சிகள் எல்லாம் உயர்வான முயற்சிகளாக இருக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் முடியும். பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை செய்யலாம். விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு அற்புதமான நாள். அதிர்ஷ்டத்தினால் வீடு, பூர்வ, புண்ணிய அனுக்கிரகத்தினால் வீடு என்று அமையும். பெண்கள் இன்று 9 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். அப்படி செய்தால் எண்ணிய காரியங்கள் இனிதாக நடைபெறும்.